Translate

Followers

தற்பெருமையின் போதை

 தற்பெருமை 



பெருமை என்ற ஒரு சொல்லை குற்றமாக நினைத்த தமிழ் புலவர்களுக்கு தற்பெருமை என்ற ஒரு சொல் ஒரு பெரும்குற்றமாக உணருகிறார்கள், நீங்கள் கேட்கலாம் பெருமை என்ற சொல் அப்படி ஒன்றும் தவறான சொல் இல்லையே, அதனை ஒருவருக்காக புகழ்கின்ற ஒரு சொல் தானே என்றால், அங்கே தான் ஒரு பெரும் குழப்பம் ஏற்படுகிறது, பொதுவாக வெற்றி பெரும் ஒரு மனிதரின் புகழ் அவரை உச்சியிலும் வைக்கும் உச்சாந்தரையிலும் வீழ்த்தும், ஒரு மனிதன் எப்பொழுது அவனை பற்றி மற்றொவர் பெருமை பேசினால் அவன் மனம் குளிர இனிப்பாக இருக்க ஆரம்பிக்கிறதோ அன்றில் இருந்து அவன் குடிபோதையை விட ஒரு மோசமான போதைக்கு அடிமையாகிறான் என்பதே ஒரு மறுக்கப்படாத உண்மை.


இது ஒருவித உண்மை என்றால் மற்றொரு சத்திய வார்த்தை "தற்பெருமை", அதாவது தன்னை பற்றி மட்டும் மற்றவர்களிடம் பெருமையாக பேசும் குணம் கொண்டவர்கள், அவர்கள் தனது வெற்றியை பற்றி மற்றவர்களிடம் பகிர்வதை விட அதனை வைத்து பெருமை பேசுவதே அதிகம், சிலர் அவர்களின் அறிவுத்திறனை வைத்து பெருமை பேசுவார், ஒருசிலர் அவர்களது பணத்தை வைத்து பெருமை பேசுவார், ஒரு சிலர் மற்றவரை தரம்தாழ்த்தி தன்னை உயர்வென நினைத்து பெருமை பேசுவார், ஒரு இயல்பான உண்மை என்னவென்றால் இந்த தற்பெருமை பேசும் மனிதர்கள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளனர், 


தற்பெருமை என்பது ஒருவித கொடிய நாகம் போல், அதை நீங்கள் என்ன தான் அழகாய் விதை போட்டு வளர்த்தாலும், அதனின் விஷம் உங்கள்மீது தான் கொட்டும், மற்றவர்கள் உங்களை பற்றி பெருமை பேசிவந்தால் அவர்களுக்கு உங்களது நன்றிகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள், அதற்கு மாறாக உங்களது நன்றிக்கடனாக அவர்களை பற்றி நீங்கள் பெருமை பேசாதீர்கள் அந்த ஒரு பழக்கத்தை கற்றுக்கொண்டால் நீங்கள் வாழ்க்கையில் பெருமையின்றி பொறுமையாக வாழலாம்.


சற்று நிதானமாக யோசித்து பாருங்கள், ஆனால் இந்த பதிவினை படித்து என்னை நினைத்து பெருமை கொள்ளாதீர்.

  • இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.

YOUR REQUEST FORM