Translate

Followers

இசை ஒரு மருந்து...

இசை 



இயற்கையே ஒரு வரம், ஆனால் இயற்கை கொடுத்த மிகப்பெரிய ஒரு வரம் என்றால் நான் இசையை தான் சொல்லுவேன், நீங்கள் என்றைக்காவது யோசித்திருக்கீர்களா இசையை பற்றி?  இசை ஒரு மகத்துவம் மட்டும் அல்ல அது ஒரு மருந்து என்ற ஒரு உண்மையை பற்றி நானும் இது வரை யோசித்ததில்லை, உதாரணத்திற்கு நாம் நடைமுறை வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் காலையில் கோழி கூவுவதில் இருந்து இரவு அமைதியான அனைத்தும் ஒரு ராகத்தில் தான் மூழ்கிறது, உலகத்தையே ஆளும் கடவுளுக்கும் ஒரு சாந்தம், ஒரு அமைதி, ஒரு நிதானம், ஒரு மகிழ்ச்சி, போன்ற அனைத்தையும் இசை தான் தருகிறது, ராவணனின் இசையை கேட்டு தான் சிவபெருமான் சாகாவரம் கொடுத்தார், உலகின் நடுவில் தாண்டவம் ஆடி கொண்டிருக்கும் நடராஜரும் இசையை கேட்டுக்கொண்டு தான் சாந்தசொரூபியாவார், சுபநிகழ்ச்சிகளில் தொடங்கி துக்க காரியங்கள் அனைத்திற்கும் இசை நம்முடன் பயணிக்கிறது,


நீங்கள் இயற்கையுடனும், இசையுடனும் ஒன்றிணைந்து வாழ்ந்தாலே இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அடிமை என வள்ளலார் கூறும் கருத்து, நான் முன்பு இசையை ஒரு மருந்துடன் ஒப்பிட்டேன் கரணம் இதோ நான் சொல்கிறேன்,


உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் அது என்ன படலாகவேண்டுமானாலும் இருக்கலாம், அழுகை பாடலாக இருக்கலாம், சந்தோச பாடலாக இருக்கலாம், காதல் பாடலாக இருக்கலாம், அது எந்த ராகமாக இருந்தாலும், அந்த பாடல் வருங்காலத்தில் உங்களுக்கு ஆனந்த ரகத்தை தான் தரும், எப்படி என்றால், நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து கொண்டபின், அதனை நீங்கள் எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டும், உதாரணத்திற்கு உங்களுக்கு தலைவலி வருகிறபொழுது அந்த பாடலை கேளுங்கள், நீங்கள் குழப்பத்தில் ஒரு முடிவை எடுக்க அந்த பாடலை கேளுங்கள், மேலும் நீங்கள் எந்த முடிவை எடுக்க யோசிக்கிறீர்களோ அந்த தருணத்தில் இந்த ஒரு பாடலை நீங்கள் கேளுங்கள்.


இதே போல் நீங்கள் பழகிக்கொண்டால் உங்களது உடல் மற்றும் மூளை இந்த பாடல் கேட்டாலே உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வரும் என்று நினைத்துக்கொண்டு மாறி விடும், இதனை குயிக் தெரபி (QUICK THERAPHY)என்று மனோதத்துவர்கள் கூறுவார்கள், 


இன்றிலிருந்து நீங்கள் இதனை செய்துபாருங்கள், சொல்லமறந்து விட்டேன் எனக்கு பிடித்த பாடல் "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே"...



  • இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.

YOUR REQUEST FORM