Translate

Followers

அர்த்தமுள்ள ஆண்

 

துன்பத்தில் சிரிப்பவன் ஞாணி, ஆனால் மனதில் துன்பம் வைத்து சிரிப்பவன் நம் ஆண் ஒருவனே, நான் ஆணாக இருப்பதால் இந்த வரிகள் வரவில்லை, பலரின் துயரங்களையும் அவர்கள் மீண்டு வந்த தூண்களையும் கண்டு தான் எழுந்துள்ளது... இக்கவிதை ஒவ்வொரு ஆண்மகனிற்கும் சமர்ப்பணம்...


அர்த்தமுள்ள ஆண்



விண்வெளியில், பதித்ததோ உன் கால் தடமடா,

உன்னால் நான் கண்ட விண்வெளியோ, உமது தோள்பட்டையடா;

உதாசினத்தை உதறித்தள்ளி முறுக்கியது உன் மீசையடா, 

யாரெவருக்கும் உதவியது, உன் உள்ளத்து பாசமடா,

தரையில் உறங்க செய்தது, உன் விஸ்வாசமாடா;

அதற்கு பரிசுமலையோ, உள்ளங்கை கருப்பு காப்படா!

சுற்றாரை சுமந்து தூக்கும் ஏணியடா,

உன் உற்றாரை சூழ்ந்து சுழற்றும் தேனியடா;

மதி மேனியடா, உன் கண்ணுக்குள் ஏன் இந்த கண்ணீர் நீராடா?

துயரம் சூழுதடா, உயரம் தொட நீ பறந்து செல்லடா, 

நெடிலெழுத்து ஆணான நெடுமாற அரசன் நீயடா! 



Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/