மங்கை ஒரு நங்கை
கண்களில் நீருடன் ஒரு கவிதை வரிகள்...
மங்கை ஒரு நங்கை
ஆணென்ன, பெண்ணென்ன ஈருலகம் ஒன்றானதே;
பகலென்ன, இரவென்ன நடுவில் ஒரு பிறை ஓடுதே,
இருட்டென்ன, வெள்ளிச்சமென்ன மையத்தில் குளிரானதே!
கும்மியடித்து கைநீட்டி பணங்காசு பசியானதே!
மானென்ன, மயிலாக இரவில் வேட்டையாடுதே;
பகலிருக்கும் வெளிச்சத்தில் எம் வாழ்கை இருட்டானதே!
கட்டைக்குரலில் பொன்சிரிப்பில் மடிப்பு நெளிவானதே,
நான் வருகையில் உந்தன் கால்கள் ஓட்டமோடுதே,
பழகிப்போன துன்பங்கள் இனித்து இன்பமானதே ,
வருங்காலங்கள் புதுவிடியலாகி சாதனையானதே ;
மனமோ மெய்சிலிர்க்க உண்மை உணருதே,
உந்தன் பிறவி ஒரு இறைவி என்று...
Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/
Labels:
Kavithaigal
