பெண்ணின் கூந்தல்
பாண்டிய மன்னரின் குழப்பமோ கூந்தலின் வாசம், அதை தீர்த்து வைத்ததோ என்பெருமான் ஈசனின் திருவாசம், இங்கு நானோ பெண்ணின் கூந்தலின் வரலாற்றை பற்றி கூறவிருக்கிறேன் எமது அழகிய தமிழில்.
பெண்ணின் கூந்தல்
மீன்கண்கள் சிமிட்டிட கடலலை அமைந்ததடி,
கூர்மேகம் முச்சிட, கோதாவரி ஓடியதடி;
இசைப்பற்கள் இசைத்திட இங்கு இயற்கையும் இயங்குதடி,
பாற்கடல் கடைந்திட அமிர்தமும் அமைந்ததடி,
அடிப்பெண்னே நீ தவிழ்கின்ற தருணத்தில் ரெட்டைவால் குருவியடி,
உன் அழகிய தருணத்தில் ரெட்டை ஜடையடி;
முகப்பருவ பயணத்தில் மல்லியோலை புட்டுசவறியடி,
உன் சலங்கையோசை நடனத்தில் உன் கூந்தல் பின்னலடி;
அந்த ஜன்னலோர வெட்கம் விண்ணைத்தொட்டதடி;
மேளதாள ஓசையுடன் கழுத்தில் விழுந்தது கல்யாணமலையடி,
மழலையில் உன் மயிரிழையில், உறங்கும் ஆராரிராரோ தாலாட்டுதடி;
அடுப்பங்கரையுலகில் கொண்டை சுற்றிய பெண்னே;
உன் கூந்தல் மனம் வீச இங்கு கவிதையானதடி...
Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/
