ஆசை
ஆசை, மனிதனாய் பிறந்த ஓவ்வொருவற்கும் ஆசைகள் பல உண்டு... ஆனால் அந்த மனிதனிற்குள்ளிருக்கும் ஆசையை எவரும் கேட்பதும் இல்லை, அவனை ஊக்கப்படுத்தி முன்னேற செய்வதும் இல்லை, இதோ மனிதனின் ஆசைகள்.
ஆசை
தவிழ்கின்ற குழந்தைக்கு பொம்மை மீது ஆசை,
தவிழும் குழந்தையை நடக்க செய்யும் அம்மாவின் ஆசை,
அறிவாளியாக எதிர்பார்க்கும் அப்பாவின் ஆசை,
மதிப்பெண்கள் பெற வேண்டுமென ஆசிரியரின் ஆசை,
மதிப்புள்ளவனாக திகழ வேண்டுமென குடும்பத்தினரின் ஆசை,
நன்றியுள்ளவனாக இருக்க வேண்டுமென நண்பரின் ஆசை;
பரிசு பொருளினை வாங்கி தர சொல்லும் சகோதரியின் ஆசை,
அன்பை எதிர்பார்த்தபடி காத்திருக்கும் காதலியின் ஆசை,
நாணயத்தை எதிர்பார்க்கும் உலகத்தின் ஆசை;
வயது முடிந்தவுடன் உயிரை எடுத்துக்கொள்ள எமனுக்கு ஆசை,
ஆனால் இவனின் ஆசையோ! சந்தோச சிரிப்பு சத்தத்தின் ஓசை...
Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/
