Translate

Followers

நான் கண்ட பெண்...


முதல் கோணல், முற்றிலும் கோணல்! என்ற பழமொழிக்கேற்ப, "என்னை பாலூட்டி, தமிழமுதூட்டி என்னை பெற்றவளும் ஒரு பெண்மணியே", 

பெண் இல்லாத இவ்வுலகம் இன்றியமையாதது என்பதுகேற்ப என் முதல் கவிதையை பெண்மணிக்கு சமர்ப்பிக்கிறேன்... 

"நான் கண்ட பெண்", என்ற தலைப்பிற்கேற்ப ஒரு கவிதை...



"நான் கண்ட பெண்"




 

தெய்வத்தினிடம் வந்த தேவதையே, 

அன்பை விதைத்து அமுதூட்டிய தேவியே, 

பௌர்ணமியை நடு நெற்றியில் வைத்த வெண்ணிலாவே, 

பலரின் மனங்களை பறக்க வைத்த பச்சைக்கிளி கூர்மூக்கே;

உன் முத்துசிதறலை அருவியாய் கொட்டும் சங்கீதமே; 

கலைதீம்பால் என்னவன் தீட்டிய ஓவியமே, 

உன் கூந்தல் கோதாவரி காவியமே, 

உன் நடனத்தில் நின்றது முல்லைத்தேர் பாரியமே; 

உன் அழகில் உருண்டது பூலோகமே, 

உன் கர்ஜனையில் கருகியது மதுரையமே!

பசிக்கு பாலூட்டும் அன்னமே! 

உன் கை கொடுக்க, கொடுக்க கொட்டியது சுவர்ணமே, 

உன் அழகறிவை பார்க்க போதாது என் இருகண்னே!

உன் திருவிளையாடல் போதுமடி பெண்னே!!


Click here to read previous post : https://vasanthamizl.blogspot.com/2020/09/vasanthamizlkavithaigal.html#more