அரவணைப்பு அவசியமே!
அரவணைப்பு
அரவணைப்பு என்ற ஒரு வார்த்தைக்கு அனைத்து தமிழ்வார்த்தைகளும் தலைவணங்கும் என்று கூட சொல்லலாம், ஒரு பிள்ளைக்கு ஒரு தாயின் அரவணைப்பு அவசியம், ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு தந்தையின் அரவணைப்பு அவசியம், ஒரு கல்லூரி மாணவனுக்கு ஒரு நல்ல நண்பனின் அரவணைப்பு அவசியம், ஒரு இளைஞனுக்கு காதல் என்ற அரவணைப்பும் அவசியம், கடைசி வாக்கியம் வேடியக்காக இருந்தாலும், ஒரு அன்பான அரவணைப்பு அனைத்து மனித இனத்திற்கு மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும்,
தமிழுக்கு எப்படி கவிதை அரவணைப்பு தருகிறதோ ஒரு ஆழமான அன்பு அவசியமே, மனிதனாக இருக்கும் நாம் கண்டிப்பாக ஒரு சூழலில் ஒரு அரவணைப்பை நாடியே செல்வோம், அந்த அரவணைப்பை நாடி செல்கின்ற பொழுது ஒரு சிலநொடிகள் அவர்களுக்கு ஏமாற்றமே நடக்கிறது, இந்த ஒரு முறையை மாற்ற நீங்கள் அரவணைப்பை கொடுக்கும் மனிதராக மாற்றிவிடுங்கள், ஒரு நாய்-இற்கு அரவணைப்பை காட்டுங்கள், வீதிகளில் செல்லும் முதியவர்களுக்கு உங்களது அரவணைப்பை காட்டுங்கள், நீங்கள் மற்றவரிடம் காட்டும் உங்கள் அழகானா புன்னகையும் ஒரு அரவணைப்பு தான்.
இறுதியில் ஒரு அழகானா வார்த்தை ஒன்று தோன்றுகிறது.
அன்பும் ஒரு அரவணைப்பே
அதனை தவறாமல் தரும் நமக்கு என்றும் குறை-குறைவே!
- இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.
YOUR REQUEST FORM
