Translate

Followers

SELLING OLD STUFFS

அந்த காலத்தில் ராஜா எல்லாம் பழைய பொருட்களை வைத்திருந்தால் அது ஒரு அதிர்ஷ்டம் இல்லாத ஒரு பொருள் என்று சொல்வார்கள், அதனால் அவர்கள் அரண்மனையில் ஓடும் பொருட்களை மற்றும் உபயோகிக்கும் பொருள்களே வைத்து வந்தனர், இதனால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்று பல மன்னராட்சியில் கூறப்பட்டுஇருக்கும் ஒரு உண்மை.





இன்று இதனை வித்தியாசமாக மினிமலிஸ்ட் (MINIMALIST) என்று பெயர் வைத்திருக்கிறார்கள், நாம் மேலுள்ள ராஜக்கதையை இன்று யோசித்து பார்த்தல் புரியும் ஆமா அது உண்மை தான அப்டினு கூட தோன்றும், ஏனெனில் ஆராய்ச்சியில் சொல்லும் ஒரு உண்மை உன்னை சுற்றி நீ பயன்படுத்தும் பொருளை மட்டும் வைத்துப்பார், அது மூலம் உனக்கு உன் நேரச்செலவை பற்றி தெரியும் என்று சொல்லிருந்தனர்.


உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஐந்து சட்டைகள் உபயோகிக்குறீர்கள் என்று வெய்துகொள்ளுங்கள், ஆனால் உங்களது அறையிலில் பத்து இருக்கிறது இப்பொழுது நீங்கள் தினமும் எதை எடுக்கலாம் என்ற ஒரு நேரசச்செலவு ஏற்படும், மேலும் எதனை எடுக்கலாம் என்று ஒரு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை யோசிப்பீர்கள், இதனை போல் தான் அனைத்து விதமான செயல்களிலும் இருக்கும், இதற்கு நீங்கள் பயன் படுத்தும் பொருட்களை மற்றும் வைத்துக்கொண்டு பயன்படாத ஒன்றை விற்று விடுங்கள், அதனை விற்று காசாக்கி விடுங்கள், இதன் மூலம் நீங்கள் எதனை செய்தாலும் நேரம்செலவிடாமல், சட்டென்று செய்து முடிக்கலாம், மேலும் ஒரு உண்மை என்னவென்றால், எந்த ஒரு பொருளும் 21 நாள் பயன்படுத்தாமல் இருந்தால் அது உங்களின் பொருள் அல்ல என்றைக்காவது அதை நீங்கள் பார்த்தால் உங்களின் நேரம் அந்த பொருள் அதிகமாக உறிந்துகொள்ளும்.

அதனால் பழையதை விற்றுவிட்டு, உங்களுக்கு வேண்டும் என்ற பொருளை மட்டும் வைத்துக்கொண்டு உங்களது நேரத்தினை சீராக சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


ஒன்று மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் விற்கமுடியாத பழைய விஷயம் உங்களின் நினைவுகள் மட்டுமே இதை தவிர அனைத்தையும் விற்றுவிட்டு நேரத்தை அழகாக பயன் படுத்துங்கள்.


நேரத்தை நல்லதாக பயன் படுத்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


  • இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.

YOUR REQUEST FORM