ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்
புத்தகத்தை நான் வாசிக்கலாமா?
நாம் வாழும் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் (21st Century) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வெளி வந்த உண்மை என்னவென்றால் கடந்த ஒரு ஐம்பது வருடங்களாக புத்தக வாசிப்பாளர்கள் கம்மியடைந்து விட்டார்கள் என்பது தான், இது கேட்க வேடிக்கையை இருந்தாலும் அது தான் உண்மையும் கூட.
புத்தகம் வாசித்தால் மேதாவி ஆகிவிடலாமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை தான் சொல்லுவேன், ஏனென்றால் புத்தகம் வாசிக்காமல் எத்தனையோ பேர் இன்றைக்கும் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள், இருப்பினும் புத்தகம் வாசித்தால் உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மாறும் என்று நான் சொன்னால் நீங்கள் வாசிக்காமல் இருப்பீர்களா?
நன்றாக யோசித்து பாருங்கள், இந்த உலகத்தில் சாதித்தவர்கள் பட்டியலில் பேசுபவர்கள் எல்லாம் கூறும் ஒரே வாக்கியம், நான் இதை இந்த புத்தகத்தில் இருந்து தான் என்னை மாற்றிக்கொண்டேன், இந்த புத்தகம் தான் என்வாழ்கை மாற காரணம் என்று பலரும் புத்தகம் புத்தகம் என்று தான் சொல்லுவார்கள், உதாரணத்திற்கு நான் "RICH DAD- POOR DAD" படித்ததால் தான் எனக்கு பணத்தின் முக்கியத்துவம் பற்றித்தெரிந்தது, இது போல அவர்கள் பல புத்தகத்தை உதாரணமாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
இது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் புத்தகம் படித்தால் எனக்கு என்ன நன்மைகள் என்று கேட்டால்!
- உங்களின் மூளை வளர்ச்சி நன்றாகவே இருக்கும் முக்கியமாக யோசிக்கும் திறன் அதிகரிக்கும்.
- உலகில் மிகச்சிறந்த திறன் ஆன கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
- உங்களின் பேச்சு வார்த்தைகள் சீரமையும்.
- நீங்கள் தினமும் புது புது வார்த்தைகளை பார்ப்பீர்கள்.
- புதிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள்.
- பல யோசனைகள் உங்களுக்கு தோன்றும் அதனை கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் செயலும் படுத்துவார்கள்.
- மனஅழுத்தம் இல்லாமல் இருக்கும்.
ஏன் அதை விட ஒரு நன்மை தினமும் செல்போன் கதிர்வீச்சிலிருந்து சிறிது நேரம் ஓய்வும் பெறலாம்.
வேடிக்கையை சொன்னாலும் இது உண்மை தான்.
இதனை எல்லாம் படித்ததும் இதனை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு பதில் - இதனை எல்லாம் ஏற்கனவே நிறைய மக்கள் படித்து வாழ்க்கையில் ஜெய்த்தும் வருகிறார்கள் அதனால் இன்று முதல் தினமும் ஒரு பத்து பக்கம் படியுங்கள், புத்தகத்தை விட ஒரு சிறந்த நண்பன் உங்களுக்கு யாரும் இல்லை.
"புத்தகத்தை படிக்க இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்".
- இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.
YOUR REQUEST FORM
Labels:
Motivation