Translate

Followers

பொறுமை

 


"பொறுமை எப்பொழுதும் தோற்காது" 

"பொறுமை ஒரு கடல் போன்றது" 

"வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய ஒரு சொத்து பொறுமை தான் என்று பல பழமொழிகள் உண்டு பொறுமைக்கு"


ஆனால் இந்த தத்துவத்திற்கு ஏற்ப ஒரு மவுஸான வார்த்தை தான் இந்த பொறுமை, பொறுமை ஒரு கடல் போன்றது என்று பொறுமையை கடலுடன் ஒப்பிடுவார்கள், உண்மை தான். கடல் இன்றைக்கும் ஒரு புதிராகவே உள்ளது கடலின் ஆழம் இது வரை தெரியாது, கடலின் அந்த புறம் என்ன இருக்கிறது என்று தெரியாது, கடலின் எல்லை அறியது, இதே போன்று தான் பொறுமையும் கடல் போன்றது அதனின் அர்த்தமும் புரியாது, அதனின் ஆழமும் நமக்கு தெரியாது.


பெரியவர்கள் சொல்லுவார்கள் பொறுமையை கையாள தெரிந்தவனுக்கு இந்த உலகத்தை ஆள தெரியும் என்று, இப்படி பொறுமையாக இருந்து சாதித்தவர்கள் வாழ்க்கையில் ஏராளம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாக உங்களுக்கு எல்லாம் தெரிந்த ஒரு உதாரணமாக நம் புத்தரை தான் சொல்ல வேண்டும், அவரை போல இருக்க வேண்டும் என்று பலர் முயற்சித்தனர் ஆனால் அது தோல்வியில் தான் கடைசியில் முடிந்தது, ஏன் அவரது சிஷியர்களால் கூட முடியவில்லை.


வாழ்க்கையில் பொறுமை கற்று தருவது ஒன்றே ஒன்று தான். நீ எந்த ஒரு சூழ்நிலையிலும், சிக்கலிலும் பொறுமையாக இரு அது கண்டிப்பாக உனக்கு வழி தானாக காட்டும்.


பொறுமையை பெற தினமும் நீ தியானம் செய்ய வேண்டும் என்று எல்லாம் சொல்வார்கள், அது எல்லாம் சில சதவீதமே உண்மை! உண்மையில் பொறுமையை பெற நீ ஒன்றை மட்டுமே தினமும் பயிற்சி செய்தால் போதும், கண்டிப்பாக தினமும் ஒருவர் உன்னிடம் உன்னை எதிர்த்து பேசுவார்கள், அது உன்னுனடைய தந்தை, தாய், அண்ணன், தம்பி, தங்கை, நண்பர்கள் யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி உன்னை எதிர்த்து பேசுகிற அந்த ஒரு கணம் ஒரு நிமிடம் நீ பொறுமையாக அமைதையாக இருந்து பார், பொறுமையின் மதிப்பு உனக்கு தெரியும்.


"பொறுமையாக இரு எதையும் நீ வெல்லலாம்"

எதையும் நீ ஏற்பாய் நீ எதிர்ப்பாய் உன்னிடம் பொறுமை என்ற ஒரு ஆயுதம் இருந்தால். 

ஆனால் அந்த ஒரு ஆயுதம் ஏந்துவதற்கு பொறுமை மிகவும் அவசியம் அமைச்சரே!



இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.

YOUR REQUEST FORM