Translate

Followers

உறுதிமொழிகள் - AFFIRMATIONS


உறுதிமொழிகள்


உறுதிமொழிகள் என்ற வார்த்தையை படித்தவுடன் நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற வாக்கியத்தை எதிர்பார்க்காதீர்கள், ஆனால் இதுவும் அது போன்ற ஒன்று தான், உங்களுக்கு நினைவிருக்கிறதா நாம் பள்ளிகளில் உறுதிமொழிகள் எடுப்போம் அதனை PLEDGE என்று அன்று கூறுவதுண்டு, நாம் அதனை தினமும் சொல்லி சொல்லி நமக்கு தெரியாமல் அதனை பின்பற்றினோம் என்பது மறுக்கப்படாத உண்மை தான்.




ஆம் ஆராய்ச்சிகளில் ஒருவன் உறுதிமொழிகளை தினமும் சொல்லிவந்தால் அவன் அதனை செய்தும் வருவான் என்பது நிரூபித்தும் காட்டியதுண்டு, மேலும் வெளிநாடுகளில் பல எழுத்தாளர்கள், பிசினஸ் மேன் போன்றவர்கள் இந்த உறுதிமொழிகளை பின்பற்றி வாழ்க்கையில் சாதித்தும் வருகிறார்கள், அப்படி என்ன உறுதிமொழி என்றால்? வாருங்கள் பார்க்கலாம்.


உறுதிமொழியை எடுக்க அதிகம் யோசிக்க வேண்டாம், ஒரு வெள்ளை காகிதத்தில் நாம் இவ்வாறெல்லாம் இருக்க போகிறோம் என்று பத்து வாக்கியங்கள் வருமாறு எழுதுங்கள், உதாரணத்திற்கு நான் தினமும் படிக்கும் உறுதிமொழிகளையே உங்களிடம் பகிர்கிறேன்.


  • என் மூளை எப்பொழுதும் புத்திசாலித்தனமாக தான் பயன்படும். 
  • நான் தினமும் பல விஷயங்களை கற்கிறேன். 
  • என் வாழ்க்கைக்கு நான் தான் பொறுப்பு. 
  • நான் எனது மனம் சொல்வதை மட்டும் தான் கேட்கிறேன் ஏனென்றால் எனது மனதை நான் மிகவும் நேசிக்கிறேன் மற்றும் நம்புகிறேன்.
  • நான் என்னை யாரோடும் ஒப்பிடுவதில்லை.


இது போன்ற வாக்கியங்களை தினமும் காலை எழுந்தவுடன் படித்தால் இதனை நீங்கள் உங்களுக்கு தெரியாமல் பின்பற்றுவீர்கள், ஏன் என்றால் நான் ஒரு ஐந்து வருடங்களாக பின் பற்றி வருகிறேன், எனது வாழ்க்கையில் நான் நல்ல மாற்றங்களே பார்த்துக்கொண்டும் வருகிறேன், ஏன் என்றால் நாம் சொல்லும் வார்த்தைக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு- WORDS HAVE POWER.


நீங்களும் இது போன்று உங்களுக்கென எழுதி அதனை தினமும் எழுந்தவுடன் வாசியுங்கள்.


வாழ்த்துக்களுடன் வசந்தமிழ்.


இது போன்ற வேறு எதாவது உங்களுக்கு வேண்டும் என்றால் இந்த LINK உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.  

கருத்துக்கணிப்பு