Translate

Followers

"தனித்தன்மை - SELF EVELOPMENT"

தனித்தன்மை 


தனித்தன்மை இந்த வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான், ஒருவரின் அல்லது ஒரு பொருளுக்கு தனித்துவமான விஷயங்கள், குணா அதிசயங்கள் இருந்தால் அது தனித்தன்மை என்று சொல்கிறோம். பல புத்தங்கள் கூறும் ஒரு பழமொழி "THERE IS NO DEVELOPMENT BETTER THAN SELFDEVELOPMENT".




இந்த பழமொழியை உதாரணமாக வைத்து நாம் நிறைய காணலாம், உதாரணத்திற்கு ஒரு மரத்திற்கு தனித்துவமே அது அழகாய் வளர்ந்து பழங்களை கொடுப்பது தான், இன்னும் சரியான உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால் பறவைகள் பல இருந்தாலும் அன்னப்பறவையின் தனித்துவம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே அதனால் தான் பறவைகளிலும் அது தனித்து நிற்கிறது.அதே போல் தான் மனிதர்களும் அவர் அவர்களின் தனித்துவத்தை உணர வேண்டும், அறியவும் வேண்டும், தனித்துவம் இல்லாத மனிதரே இங்கு கிடையாது மனிதனாய் பிறந்த அனைவர்க்கும் தானித்துவங்கள் உண்டு, ஒருவன் நன்றாக பாடுவான், ஒருவன் நன்றாக ஆடுவான், ஒருவன் நன்றாக அனைவரிடமும் பேசுவான் இதனை போல் பல தானித்துவங்கள் உள்ளது, அந்த தனித்துவத்தை கண்டறிந்து அதனை கூர்மை படுத்துங்கள் அதனை உங்களது வாழ்கையாகுங்கள்,


உதாரணத்திற்கு நீங்கள் நன்றாக பேசுவர் என்றால் நன்றாக பேச தினமும் பயிற்சி எடுங்கள் அந்த பேச்சு தான் உங்கள் சொத்து என்று உணருங்கள், அதன் மூலம் நீங்கள் வருமானம் வருமாறு செய்யுங்கள், பின்னர் அதனையே உங்களது தொழிலாக மாற்றிக்கொள்ளுங்கள், பிடித்த வேலையை செய்தால் அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற மனம் வராது.


இதற்கு சரியான எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் அவர் தனித்துவம் அவரது நடை, உடை, பாவனைகள் தான் அதனை அவர் மெழுகேற்றி இன்றும் அவர் சாதித்து கொண்டுதான் இருக்கிறார்.


நீங்களும் உங்களது தனித்துவத்தை கண்டறிந்து சாதியுங்கள்.


அதற்கு வசந்தமிழின் வாழ்த்துக்கள்.