PLEASE SPEND 1HR WITH YOUR FAMILY!!!
குடும்பம்...
நம்ப எல்லார்க்கும் ஒரு குடும்பம் இருக்கும், வீட்டுக்கு உள்ளே மனிதர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கும், வீட்டுக்கு வெளியில் இருக்கிற நாய், பூனை, பறவை, சிங்கம் என்று அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கும்.
நீங்க ஒன்னு கவனிச்சிருந்தீங்கனா உங்களுக்கு ஒன்று புரிய வரும், ஐந்து அறிவு என்று சொல்லுகின்ற மிருங்கங்க கூட அதோட குடும்பத்தோட தினமும் நேரம் செலவிடுது, குறிப்பா பறவைகளை எடுத்துப்போம், பகலெல்லாம் எங்க சுத்துனாலும் அதோட கூட்டுல சென்று குடும்பத்தோட அன்றைய இரவை கழிக்குது.
இதே போல மனிதர்கள் ஆகிய நம்ப இந்த விஷயத்தை செய்ரோம? என்ற கேள்விக்கு பதில் உண்மையாக இல்லை என்று தான் சொல்லவேண்டும், அதுவும் இந்த கைபேசி உலகத்தில் நாம் நமது குடும்பத்தை மறந்தே விடுகிறோம், இப்ப உள்ள தலைமுறைகள் காலையில் எழுவது - குளிப்பது - குழந்தைளாக இருந்தால் பள்ளி கல்லூரிகள், பெரியவர்களாக இருந்தால் வேலை சென்று இரவு வந்ததும் களைப்பாக தூங்க சென்று விடுவார்கள், இதில் நாம் எங்கு இருந்து குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குகிறோம்? சற்று நீங்களும் சிந்தித்து பாருங்கள்.
நீங்கள் சொல்லலாம் இந்த ஓட்டம் எல்லாம் குடும்பத்திற்காக தான் செய்கிறோம் என்று, இதெல்லாம் இருந்தாலும் தினமும் ஒரு சில மணிநேரமாவது அவர்களிடம் நீங்கள் இருந்து வந்தால் உங்களது ஓட்டத்திற்கு அர்த்தம் கண்டிப்பாக இருந்து வரும், அந்த சிலமணிநேரம் சீட்டுக்கட்டு விளையாடுவது, கதை பேசுவது ஏன் நீங்கள் அனைவரும் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தாலும் பரவாயில்லை, ஆனால் உங்க குடும்பம் முழுவதும் தினமும் ஒரு - ஒருமணிநேரம் உங்கள் குடும்பத்தோடு பழகி பேசி சிரித்து வந்தால் உங்கள் ஓட்டம் உங்களது போராட்டம் உங்களது அனைத்தும் சந்தோசமாக இருக்கும், பிள்ளைகள் பெரியவர்கள் என அனைவரும் புரியும் தருணமும் வரும்.
இன்றுமுதல் நீங்கள் இதனை கண்டிப்பாக செய்து பாருங்கள்.
- இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.
YOUR REQUEST FORM
