Translate

Followers

PLEASE LEARN AND KNOW ABOUT TECH SKILLS!

 காலம், நேரம், வயது, வாரங்கள், நாட்கள் என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் இது எல்லாமே ஓட்டப்பந்தயம் போல் வேகமாக தான் ஓடிக்கொண்டு இருக்கிறது, முன்னே எல்லாம் ஒரு கடைக்கு போக வேண்டும் என்றால் ஒரு பெரிய லிஸ்ட் ஒன்றை போடுவோம், என்ன வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும் என்றெல்லாம், ஆனால் இன்றைய காலகட்டங்களில் ஒரு கைபேசி ஒன்று போதும் அது இருந்தால் நீ உலகத்தை கூட பணம் இல்லாமல் சுற்றி வரலாம், அந்த அளவு தொழில்நுட்பம் என படும் டெக்னாலஜி வளர்ந்து கொண்டுஇருக்கிறது.




இது இந்த காலத்து பசங்க-எலாம் இதனை எளிதில் கற்றுக்கொண்டு வருகிறார்கள், ஆனால் இதற்கு முன் இருந்த தலைமுறைகள் (80s & 90s) சற்று பயன் படுத்த கஷ்டப்படுகிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை தான். இந்த காலத்தில் உதவி என்று ஒருத்தரிடம் நிற்கமுடியாது அதுவும் இந்த கலியுகத்தில், அதுவும் சில விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்றால் அதனை மற்றவரிடம் கேட்க ஒருவித கூச்சம் நம்மளை ஒருவித சோகத்திற்கு தள்ளிவிடும்.


இதனால் பேசிக் (BASIC) டெக்னாலஜிகளை கற்றுக்கொள்ள வேண்டும், உதாரணத்திற்கு ஒரு ஸ்மார்ட் போனை உபயோகம் செய்வது, ஏடீஎம் (ATM) இல் பணம் எடுப்பது டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்வது போன்ற விஷயங்கள் யாவும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும், படித்தவர் படிக்காதவர் என்று இதில் இல்லை அனைவரும் இதனையெல்லாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருது.


மேலும் இது மற்றவர்களுக்காக என்றாலும் இன்றைய தலைமுறைகளில் வளரும் மனிதர்கள்யாவும் எதாவது ஒரு டெக்னாலஜி ஸ்கில்லை வளர்த்துக்கொள்ளுங்கள், ஏன் என்றால் இன்றைய உலகம் அதனின் உதவியால் தான் சுழன்று கொண்டு இருக்கிறது.


இது கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் வழியும்நடத்தும்.


  • இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.

YOUR REQUEST FORM