Translate

Followers

DO CLEANING!!!


 சுத்தம்...

சுத்தம் என்று சொன்னாலே மக்களுக்கு ஒரு வித அலர்ஜி வந்துவிடுகிறது, உதாரணத்திற்கு நமது நாட்டு பிரதமரான மோடி- ஜியை எடுத்துக்கலாம், அவர் ஒருமுறை ஒரு தொடப்பதை எடுத்து அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு, சுத்தமான இந்தியா (CLEAN INDIA) என்று சொன்னபொழுது அனைவரும் அதனை கண்டு சிரித்தனர், ஆனால் சற்று யோசித்து பாருங்கள், மோடி அவர்கள் செய்த ஒன்றை ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை செய்தால் அது சுத்தமான இந்தியாவாக இருந்துருக்கும் தானே? அந்த திட்டமும் அன்று அனைத்து நாடுகளில் பேசப்பட்டிற்கும் ஒரு விஷயமாக கூட இருந்திருக்கலாம்.




நீங்க ஒரு விடுமுறைக்காக ஒரு ஹோட்டல்-இற்கு செல்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் எதனை பார்ப்பீர்கள்? அந்த குறிப்பிட்ட ஹோட்டல் சுத்தமாக உள்ளதா? இல்லையா? அவர்களின் சர்விஸ் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று தானே? அதே போல் நாமும் ஏன் நமது சுற்றி இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள தவறுகிறோம்?


பெரிய உதாரணமாக நமது படுக்கையறையை எடுத்துக்கொள்வோம், நீங்கள் அன்று தலைவலியோடு உங்கள் வீட்டுக்குள் செல்கிறீர்கள், தலைவலியினால் தூங்கலாம் என்று சென்றால், உங்கள் அறை உங்களை இன்னும் அதிகமா தலைவலியில் ஆழ்த்தும், இதுவே உங்களது வீட்டில் உள்ள ஹால், சமையல் அறை உங்களது படுக்கை அறை எல்லாம் சுத்தமாக இருந்தால் நீங்கள் எந்த ஒரு பிரச்னையோடு வீடு வந்தாலும் உங்களது வீடு உங்களை மற்ற செய்யும், சுத்தம் செய்து அதனை சரியாக வைத்து வந்தால் உங்களது ஸ்ட்ரெஸ் (STRESS) எனப்படும் மனஅழுத்தம் குறையும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் உறுதியும் படுத்தியிருக்கிறார்கள்.


மேலும் நீங்கள் எதையாவது யோசித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அதுவும் உங்களது சுத்தமான அறையில் உட்கார்ந்து யோசிக்கிறீர்கள் என்றால் அந்த யோசனை கூட விரைவில் வந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்,  

"மனிதர்களின் உண்மையான சுத்தம் அவன் வீட்டில் உள்ள கழிவறையை  பார்த்தால் தெரியும்" என்று மஹாத்மாவும் சுத்தத்தை பற்றி கூறியிருக்கிறார்.


சுத்தம் என்பது உங்களை சுற்றி இருக்கும் இடத்தையும் உங்களது மனதையும் சேர்த்து சுத்தமாக வைத்திக்கொள்ளுங்கள், அது கண்டிப்பாக உங்களது ஆரோக்கியம் அதிகரித்து செல்லும்.



  • இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.

YOUR REQUEST FORM