Translate

Followers

SELF LOVE

 SELF LOVE


கருப்பு - வெள்ளை 

வானம் - பூமி 

இரவு - பகல்

சூரியன் - சந்திரன் 

நல்லது - கெட்டது


இதே போல் எல்லாமே நம் வாழ்க்கையில் இருந்துகொண்டு தான் இருக்கிறது, இதையெல்லாம் கடந்துகொண்டு தான் நாம் தினமும் வாழ்கிறோம் செல்கிறோம்.




காலையில் எழுந்ததும் அடுத்தவரிடம் சொல்லும் குட் மார்னிங் இல் இருந்து ஆரம்பிக்கும் நாள் அடுத்தவர்களிடம் முடிந்தும் விடுகிறது, அம்மா, அப்பா, தங்கை, தம்பி, அக்கா, அண்ணண், தோழி, தோழன், காதலி, மனைவி என அனைத்து சொந்தத்தையும் பார்ப்பதிலே பாதி வாழ்க்கை போகிறது, போகிகொண்டும்தான் இருக்கிறது.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கு என்று வரும் பிறந்தநாளில் கூட அடுத்தவனுக்கு என்ன treat வைக்கலாம் என்று தான் உங்களின் மனம் யோசித்து கொண்டு இருக்கிறது, 


இந்த நிமிடம், இந்த வினாடி உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், 


எத்தனை பேர் உங்களுக்காக வாழ்கிறீர்கள்? நான் செய்யும் வேலையிலிருந்து நான் சாப்பிடும் உணவு, நான் உடுத்தும் உடை எனது பேச்சு முதல்கொண்டு நான் செய்யும் செயல் யாவுமே எனக்கு பிடித்ததுபோல் தான் உள்ளேன் என்று முழுமனதுடன் சொல்கிறீர்கள்?


இங்கு ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மை, இந்த உண்மை சராசரி மனிதனில் இருந்து இந்தியாவின் பிரதமர் வரை பொருந்தும்.

நம்பலை எப்போது கவனிக்குறோம் என்றால் கண்ணாடியில் முகம் பார்த்து தலை வாரும்போது மட்டும் தான், மற்றவர்களுக்காக அனைத்து வேலைகளும் செய்யலாம் ஏன் என்றால் இந்த உலகமே மற்றவர்களை நம்பி தான் இருக்கு.

காதலை மற்றவர்கள் மேல் அதிகம் காட்டுவதை விட ஒருமுறை நீங்கள் சிறியதாய் உங்களிடம் காட்டினாள் உங்களுக்கு காதல் தோல்வி என்பதே இல்லாமல் இருக்கும், ஏன் என்றால் உங்களை நீங்கள் என்றும் எப்பொழுதும் கைவிட மாடீர்கள்.


வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடி உனக்கு பிடித்ததை செய்து கொண்டு, தினமும் ஒரு பத்து நிமிடம் உன்னிடம் பேசி மொட்டைமாடியில் நடந்துகொண்டு, இரவு படுக்கும் சமையத்தில் அன்றைய நாளில் உனக்கு பிடித்ததை செய்தாய்யா? என்பதை யோசித்துக்கொண்டு உங்களது உடல் சீராக தான் உள்ளதா என்பதையும் சரிசெய்து சிறிது அக்கறைகாட்டலாமே.


ஏன் என்றால் உன் வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது, 

ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல்.


சந்தோசம் உன் கையில் நீ யோசி...