Translate

Followers

சிங்க நடை போடு

 


சிங்க நடை போடு 


நடந்து செல்லுங்கள்!


நடந்து செல்லுங்கள் என்று நான் சொன்னதும் நீங்கள் நடை பயிற்சி என்று நினைத்துகொள்ளப்போகிறீர்கள், நான் அதை பற்றி சொல்லவரவில்லை.




சற்று நினைத்து பாருங்கள் நமது வாழ்க்கையில் தினமும் எதாவது ஒரு பிரச்சனையில் நாம் மாட்டிக்கொண்டு தான் வாழ்க்கையை கடந்து செல்கிறோம், அந்த பிரச்னையை நினைத்து நினைத்து நாம் வேறொரு பிரச்சனைக்குள்ளும் மாட்டிக்கொள்ள நேருகிறோம், இதனால் நமக்கு மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறோம்.


ஒரு பிரச்சனை மனதளவில் சென்றாலே அந்த ஒரு வலி நம்பளை எந்த ஒரு செயலையும் செய்ய நேரிடாது, இதற்கு ஒரே தீர்வு இயற்கை தான், "இயற்கை வாழவும் பல நேரம் வைக்கிறது", அந்த இயற்கையுடன் நீங்கள் பழகுங்கள் இயற்கையிடம் பழக வேண்டும் என்றால் செடி, கொடியிடம் சென்று பேச வேண்டும் என்று அர்த்தம் இல்லை, இயற்கையோடு நடந்து பழகுங்கள்.

தினமும் ஒரு மணி நேரம் இயற்கையுடன் நடந்து செல்லுங்கள், அந்த காற்று உங்கள் மேல் படும், நீங்கள் நடக்கும் பொழுது பலரை சந்தீப்பீர்கள் பல இயற்கை விஷயத்தை காண்பீர்கள், இதனால் பல மாற்றங்கள் உங்களின் மனதளவிலும் உடளவிலும் மாறும்.


உங்கள் மனம் ஒரு நிம்மதி சாணத்தை அடையும் அந்த ஒரு மணி நேரம் நீங்கள் எதை பற்றியும் நினைக்காமல் நடந்து செல்லுங்கள், இப்படி நடந்தால் உங்களின் இதயமும் பலமாகும், அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி ஒரு மனிதன் ஒரு மணி நேரம் நடந்தால் அவனுக்கு மாரடைப்பு மற்றும் இதயநோய் வராது.


அதனால் நீங்கள் நடங்கள், சிங்க நடை போடு நடங்கள்.