நேரம்
நேரம்
நேரம் என்றைக்குமே எல்லார்க்கும் நல்ல நேரம் தான், அதை நாம் எப்படி பயன் படுத்திகிறோம் என்பதில் தான் இருக்கு. ஒரு பழமொழி உண்டு ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது, ஐயர்னு மட்டும் இல்ல யார் வரும்வரையும் நேரம் காத்துட்டு இருக்காது அது தான் உண்மை.
நேரம் இப்ப நிறைய மாறிடுச்சு முன்ன எல்லாம் நேரத்தை கைக்கடிகாரத்துல பாத்துட்டு இருப்போம், ஆனால் இப்ப அது கைபேசில பாக்குற அளவுக்கு நேரம் நம்பள கொண்டு சென்றிருக்கு, அப்படி பட்ட நேரத்தை ஒரு பெண்ணிற்காக தான் கண்டுபுடிச்சாங்க, உண்மையில் தான் பதினாறாம் நூற்றாண்டில் ஒரு இளவரசிக்காக தான் பெண்டுலம் கிளாக் என்று அறிமுக படுத்தினாங்க அன்றைக்கு அந்த ராணி மட்டும் இல்லனா இந்த நேரம் கூட நமக்கு வந்திருக்காது போல,
கடவுளுக்கு நிகரான நேரத்தை கூட பெண்ணிற்காக தான் மனிதன் படைக்குறான்.
வேடிக்கையாக உள்ளது!
பொதுவாக நேரத்தை நன்றாக பார்த்தீங்கன்னா, மனித வாழ்வியலில் மூனில் ஒரு பங்கு தூங்கியே அதை வீண் அடிக்குறோம், பின்னர் அறுபது சதவீதம் வேலைக்காக செலவிடுகிறோம் மிச்சம் ஒரு இருபது அல்லது முப்பது சதவீதம் தான் அவர் அவர் வாழ்க்கைக்காக செலவிடறாங்க, ஆனால் பலர் அந்த கிடைக்குற சதவீதத்தை கூட வீணடிக்குறாங்க.
என்றைக்காவது நீங்க நேரத்தை மிகவும் வீண் அடிக்குற மாதிரி நினைத்தீர்கள் என்றால் ஒரு சிலர்கிட்ட நேரத்தோட அருமையை பற்றி கேளுங்க
- பள்ளிகளில் தோல்வி அடையும் மாணவன் கிட்ட கேளுங்க ஒரு வருடத்தோட விலை என்னனு சொல்லுவான்.
- பத்தாவது மாத கர்பிணி கிட்ட கேளுங்க ஒரு மாச வலி என்னனு சொல்லுவாங்க.
- விபத்தில் பொழைத்தவர்கள் கிட்ட கேளுங்க ஒரு விநாடியோட மதிப்பு என்னனு சொல்லுவாங்க.
பணக்கார்களிடம் கேட்டால் சொல்லுவாங்க பணத்தை விட நேரத்திற்கு தான் மதிப்பு அதிகம் என்று.
அவர்கள் சொன்ன ஒரு உண்மை
தினமும் உங்கள் கையில் பணம் வைத்திருந்தால் நீ அதை வீணடிக்கமாட்டாய், ஆனால் நேரத்தை மட்டும் ஏன் வீணடிக்குறாய்?
இந்த உலகத்தில் நேரம் இலவசம் தான் ஆனால் திரும்ப சென்றால் கிடைக்காத ஒன்று.
கிடைக்கும் நேரத்தை மட்டும் அல்ல அனைத்து நேரத்தையும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி
வசந்தமிழ்
