எழுதுதல் சிறப்பு
எழுதுதல்
எழுதுவது என்றாலே எல்லோருக்கும் கடினம் தான், பள்ளிக்குழந்தைகளில் தொடங்கி வீட்டிற்கு மளிகை பொருள் எழுதும் அம்மாவரை எழுதுவது கடினம் தான், ஆனால் எழுதாமல் உங்களால் எதையும் சரியாக செய்ய முடியாது, உதாரணத்திற்கு என்னதான் படித்திருந்தாலும் அதனை எழுதும் சமையம் தான் நாம் எவ்வளவு படித்திருந்தோம் என்ற ஒரு அறிவு நமக்கு வரும்.
அதே போல் தான் நாம் தினமும் ஒரு பத்து நிமிடம் எழுதினால் உங்கள் வாழ்க்கை பத்து வருடம் அழகாக மாறும் என்று பலர் கூறுகிறார்கள்.
எழுதுவது மூலம் உங்களை நீங்களே புரிந்து கொள்கிறீர்கள், உதாரணத்திற்கு பணக்காரர்கள் அந்த காலத்தில் தினமும் டைரி எழுதும் பழக்கம் உடையவர்கள், அது அவர்களுக்கு அன்றைய நாளை நினைவூட்டவும் செய்யும் அந்த நாளில் அவர் எப்படி இருந்தார் என்பதையும் அவருக்கு உணர்த்தும்,
பத்து மனிதர்களால் செய்யாத ஒரு வேலையை ஒரு பேணா செய்யும், நமக்கு எல்லாம் தெரிந்த விஞ்ஞானி எடிசன் தனது புகைப்பழக்கத்தை அவர் தினமும் எழுத்துவதினால் தான் விட்டார் என்பது அவர் எழுதிய டைரியிலே குறிப்பிட்டுஇருந்தார்.
அதே போல் தான் நீங்கள் எழுதுங்கள், இன்றைய நாளை பற்றி எழுதுங்கள், அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டத்தை எழுதுங்கள், கதையை எழுதுங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சன்னை இருக்கிறது என்றால் கவுன்செல்லிங் கூட செல்லவேண்டாம், ஒருவர் அவனுக்குள் பேசி எழுதினால் போதும்,
நீங்கள் எதிலாவது தோல்வி அடைந்து விட்டால் எழுதுங்கள் உங்களிடம் பேசிக்கொண்டு எழுதுங்கள், நாம் எங்கே தோற்றோம் போன்றவற்றை எழுதுங்கள், அது உங்களுக்கு கண்டிப்பக உங்களை வெற்றி பாதைக்கு கூட்டிச்செல்லும், எழுதுவதினால் உங்களது விருப்பு வெறுப்புகளை போக்கும், மனம் தெளிவு பெரும் மேலும் நன்றாக சிந்திப்பீர், எழுதியதை முடிக்க செயல் படுவீர்,
அதனால் இப்பொழுதே எழுதுங்கள், எழுதிவிட்டு நீங்கள் என்ன எழுதினீர்கள் என்று பகிருங்கள்.
நன்றி!
