Translate

Followers

ஏப்ரல் 1-இன் ரகசியம்

ஏப்ரல் 1 


பொதுவா ஏப்ரல் ஒன்று நாளே எல்லாருக்கும் நியாபகம் வருவது, அது ஒரு முட்டாள் தினம் மற்றும் எல்லாரையும் முட்டாள் ஆக்கும் தினம், இப்படி தான், பலரும் நினைப்பதுண்டு, ஆனால் யோசித்து பாருங்க முட்டாளுக்கு ஒரு தினம் கொண்டாடுவாங்களா? குழந்தைகள் தினம், காதலர்கள் தினம், ஆசிரியர் தினம் இப்படி பல நல்ல தினங்களை உருவாக்கிய நம்ப முன்னோர்கள் முட்டாளுக்கு ஒரு தனி தினம் உருவாகியிருப்பாங்க?


கொஞ்சம் வரலாற திரும்புனீங்கனா 1582 ல கிரிகோரியன் காலண்டர் என்று ஒன்னு அறிமுக படுத்தினாங்க, அதில் ஜனவரி மாதம் முதல் நால தான் எல்லாரும் புத்தாண்டா கொண்டாடணும் என்று அறிவிச்சாங்க, ஏன் என்றால் அதற்கு முன்னாடி மக்கள் அனைவரும் ஜூலியன் காலண்டர்- ஐ பயன் படுத்திட்டு வந்தாங்க அதுல ஏப்ரல் ஒன்று தான் புத்தாண்டாக குறிப்பிட்டு இருந்தது, இதுனால புதிய காலண்டர் ஆனா கிரிகோரியன் காலண்டர் வந்ததால் மக்கள் இதனை பயன் படுத்த வேண்டும் என்று, குறிப்பாக இந்த காலெண்டரில் புத்தாண்டாக ஜனவரி மாதம் முதல் தேதியில் தான் பிறக்கிறது அதனால் இனி நமக்கு அது தான் புத்தாண்டு அப்படி மீறி ஏப்ரல் ஒன்று அன்று கொண்டாடுபவரை "முட்டாளாக அறிவிப்பேன்" என்று சொன்னார்கள், அது நாளடைவில் ஏப்ரல் ஒன்று முட்டாள் தினமா மாறிடுச்சு.


ஆனா இப்ப இந்த தலைமுறையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த தினத்தில் சின்ன குறும்புகள் செய்து கொண்டு பல சேட்டைகள் செய்துகொண்டு பல பேர்களை கேளிக்கை செய்யும் நாளாக இந்த நாள் ஆகி விட்டது,  

ஆராய்ச்சியாளர்கள் பலர் இந்த நாளில் தான் மக்களின் சந்தோசம் சற்று அதிகமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.


என் என்றால் நம் மக்களுக்கு சந்தோசமே அடுத்தவனை முட்டாள் ஆக்குவது தானே!


ஆனால் நாம் அப்படி இல்லாமல் இந்த முட்டாள் தினத்தை மறந்து இந்த ஒரு நாளில் நம் அறிவாளி என்று நிரூபிக்கும் தருணமாக எதையாவது இந்த நாள் முடிவதற்குள் செய்து முடிப்பேன் என்று உறுதிமொழியெடுங்கள்.


அந்த உறுதிமொழியை என்னிடம் பகிருங்கள் நானும் கேட்கிறேன். 



நன்றி.