Translate

Followers

SIX THINKING HATS BOOK IN TAMIL

 பொதுவாக நாம் எந்த ஒரு செய்யலையும் மிகவும் எளிதாக செய்திடுவோம் ஆனால் ஒரு முடிவு எடுப்பதற்கு பல தடுமாற்றங்கள் ஏற்படும், இப்படி தடுமாறாமல் ஒரு சரியான முடிவு எடுப்பது எப்படி என்று வாருங்கள் இன்றைய "SIX THINKING HATS" புத்தகத்தில் இருந்து படிக்கலாம்.




பொதுவாக ஒரு முடிவினை நீங்கள் மற்றவர்களிடம் சொன்னால் அவர்கள் உங்களை பல-வாறு விமர்சிப்பார்கள், அப்படி ஒரு விமர்சனத்தை நீங்கள் பெறாமல் நீங்களே அந்த விமர்சனத்தை உங்களது மேல் வைத்து உங்களின் முடிவினை சரியாக மாற்றுங்கள், உங்களது கையில் ஆறு வித வண்ண தொப்பிகள் இருப்பது போல் நினைத்து கொள்ளுங்கள்.


நீல நிற தொப்பி- பொறுப்பாளர்:

எந்த ஒரு விளையாட்டிற்கும் சரி எந்த ஒரு குழுவிற்கும் சரி ஒரு பொறுப்பாளர்கள் இருப்பார்கள், அவர்கள் தான் அதில் முன்வந்து முடுவுகளை எடுப்பார்கள் இந்த ஒரு விஷயத்தை ஒரு உதாரணத்தோடு காண்போம், ஒரு தொழிற்சாலையில் நீங்கள் தான் முதலாளி என நினைத்து கொள்ளுங்கள் அந்த தொழிற்சாலையை எப்படி முன்னேற்றலாம் என்ற ஒரு திட்டம் உங்களுக்கு தான் இருக்கும் அதாவது யாரை வேலைக்கு எடுப்பது போன்ற ஒரு முடிவாகும்.


வெள்ளை நிற தொப்பி- புள்ளிவிவரங்கள்: 

மேலுள்ளதை போன்று உங்களது தொழிற்சாலையில் வேலைக்கு ஆள் எடுத்து விடீர்கள் என்றால் அவர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்ற ஒரு புள்ளிவிவரம் எப்பொழுதும் நீங்கள் நோட்டம் கொண்டு இருக்க வேண்டும்.

இப்படி ஒரு புள்ளிவிவரத்தை மேல்கொண்டால் நாம் எந்த இடத்தில் சரிவாக இருக்கிறோம் என்று கண்டு அறியலாம்.

மேலும் உதாரணத்திற்கு: நீங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்றால் அந்த செலவுகளை குறிப்பிட்டு எதனை குறைக்கலாம் என்று கூட சரிசெய்யலாம்.


சிகப்பு நிற தொப்பி-  உணர்ச்சி:

நாம் மேல் கொண்ட இரண்டு விஷயங்களை செய்தால் நாம் எந்த இடத்தில் இருப்போம் என்ற ஒரு உணர்வுப்பூரமாக யோசியுங்கள், உங்களுக்கு அந்த வெற்றி வந்து விட்டால் நீங்கள் எவ்வாறு உங்கள் வாழ்க்கை மாறும் என்று யோசியுங்கள்.


பச்சை நிற தொப்பி- சிந்தனை:

மேல்கொண்டவற்றை  பின்பற்றி இதில் நாம் என்ன புதிதாக செய்தால் வெற்றிபெறலாம் என்று சிந்தியுங்கள் மேல் கூறிய உதாரணத்தை பின்பற்றி பார்க்கலாம், இப்பொழுது உங்களின் தொழிற்சாலையில் நீங்கள் உங்களுக்கு தேவையான ஆட்களை நியமித்து அவர்களின் புள்ளிவிவரங்களை பார்த்தும் அதற்கு ஏற்றவாறு செயல் பட்டு இருக்கிறீர்கள் ஆனால் இந்த வேலை எப்பொழுதும் ஒரே மாதிரி தான் செய்து வருகிறது இதற்கு மாறாக இந்த இடத்தில் நேரத்தை குறைத்து வேலைகளை அதிகமாக செய்வது எப்படி என்ற ஒரு திட்டத்தை தீட்டுங்கள் இந்த ஒரு திட்டம் தான் உங்களது புதியதாக சிந்தனையை வெற்றி பெறவும் உதவும்.


மஞ்சள் நிற தொப்பி - நன்மை:

மேல் கூறியவற்றை செய்தால் நாம் எவ்வாறு நன்மை பெறலாம் என்று யோசியுங்கள். இந்த ஒரு நன்மையே நீங்கள் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் உண்டாகும்.


கருப்பு நிற தொப்பி- விமர்சனம்:

இப்பொழுது மேல் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் நல்லவிதமாக யோசித்து வைத்தீர்கள் இப்பொழுது அதற்கு மாறாக யோசிக்க வேண்டும் ஒரு வேலை இது சொதப்பி விட்டால் என்ன நடக்கும் என்று யோசியுங்கள், அப்படி ஆனால் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்றும் யோசித்து வையுங்கள்.


மேல்கூறிய வற்றை பயன் படுத்தி உங்களது முடிவுகளை நன்றாக முடிவெடுக்க வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: