புதியதாக ஒரு செயலை கற்பது எப்படி?
புதியதாக ஒரு செயலை கற்பது எப்படி?
நமக்கு புதியதாக ஒரு செயலை செய்ய வேண்டும், அதனை கற்க வேண்டும் என்று பல ஆசைகள் இருக்கும். ஆனால் அதனை நாம் எவ்வாறு தொடங்குவோம் என்ற ஒரு குழப்பத்தில் மிகவும் மூழ்கி சோகத்தில் இருப்போம், நீங்கள் ஒரு செயலை புதியதாக செய்ய என்ன செய்வீர்கள் அதில் என்னலாம் செய்யலாம் என்னவெல்லாம் கற்கலாம் அதற்கு என்ன பொருட்கள் தேவை என்று முதல் புள்ளியில் இருந்து முற்றுப்புள்ளி வரை தெரிந்து கொண்டு வைப்பீர்கள், இப்பொழுது அந்த செயலை தூரத்தில் இருந்து பாத்தால் உங்களுக்கு அந்த செயல் மிகவும் பெரியதாக தெரியும் இதனை நாம் செய்ய வேண்டுமா? என்ற ஒரு கேள்வி கேட்க்கொண்டு அதனை செய்ய மறுத்து விடுவீர்கள்.
இவ்வாறு செய்யாமல் ஒரு செயலை செய்ய நினைத்தால், அதனை தொடங்கி விடுங்கள். அது எவ்வாறு செய்ய வேண்டும் என்று எல்லாம் யோசிக்காதீர்கள், அதனை முதலில் தொடங்கி விடுங்கள் அதனை தொடங்கிய பின்னர் தெரியாத இடங்களில் சிறிது சிறிது பயிற்சிகளோடு கற்றுக்கொள்ளுங்கள் ஒரு நல்ல பயிற்சியே அந்த செயலின் வெற்றியாகும்.
அதனால் நீங்கள் ஒரு செயலை செய்ய முடிவு எடுத்தால் அதனை முழுவதும் அறையாமல் அதனை முதலில் தொடங்கி விடுங்கள்.
அதனை இன்றே தொடங்க இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்