Translate

Followers

The 80/20 Principle book in tamil

 பொதுவாக இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கு மட்டும் அல்ல எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு தந்திரம் இருக்கிறது, அந்த தந்திரத்தை கற்று கொண்டால் அவன் தான் வாழ்க்கையில் சக்கரவர்த்தி, உங்களின் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க 80/20 விதியை பயன் வெற்றி பெற வாருங்கள் இந்த "The 80/20 Principle" புத்தகத்தை படிக்கலாம்.




80/20 விதி என்றால் என்ன? பொதுவாக நாம் நினைத்திருப்போம் நாம் கடினமாக உழைத்தால் தான் நூறுசதவீத வெற்றி நமக்கு கிடைக்கும் என்று, ஆனால் உண்மையில் அது தவறு, நாம் செய்யும் வேலையை 20% கவனமாக செய்யதலே நமக்கு 80% வெற்றி கிடைக்கும் என்று இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் கூறுகிறார்.


இந்த 80/20 விதி வெற்றி பெறுவதற்கு மட்டும் அல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும், உதாரணத்திற்கு 20% ஓட்டுநர்களால் தான் 80% விபத்து நடக்கறது, 20% மக்கள் மட்டுமே இந்த உலகத்தில் வசதியாய் இருக்கிறார்கள், 20% எழுத்தாளர்களின் புத்தங்களே 80 சதவீதம் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இவ்வாறு வாழ்க்கையில் நாம் செய்யும் 20% வேலை நமக்கு 80% வெற்றி தரும் என்பது உறுதியாகி கொண்டிருக்கிறது.


இந்த ஒரு விதி நமக்கு வியாபாரத்திற்கும் பொருந்தும் வெறும் 20% வாடிக்கையாளர்கள் தான் நம்முடைய 80 சதவீத லாபத்திற்கு காரணமாகிறார் அதனால் அந்த 20% வாடிக்கையாளர்களை நாம் ஒருபோதும் விட கூடாது. இவ்வாறு இந்த ஒரு கூற்று அனைத்து வணிகத்திற்கு பொருந்தும்.


பங்கு சந்தையில் கூட ஒரு 20% பங்குகள் தான் எப்பொழுதும் ஏற்றம் உயர்வாக காணப்படும் இதனை நீங்கள் எந்த ஒரு வருஷம் எடுத்தாலும் இந்த ஒரு கூற்றை உறுதி படுத்தலாம்.


நீங்கள் ஒரு வேலையே 24 மணி நேரம் கடினமாக உங்களின் உடலை வருத்தி செய்வீர்கள், ஆனால் அந்த வேலையை ஒருவன் ஆறு மணி நேரத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பான், ஏன்எனில் நீங்கள் இதனை எப்படி செய்யலாம் என்று யோசிக்காமல் இதனை செய்தே முடிக்க வேண்டும் என்று எதாவது ஒன்றை செய்வீர்கள் நடுவில் நீங்கள் ஓய்வு எடுப்பீர்கள் உங்களது கவனமும் உங்களின் கைபேசியில் அடிக்கடி கொண்டு செல்லும் ஆனால் இந்த ஆறு மணி நேரம் வேலை பார்த்தவன் இந்த வேலையை எவ்வாறு செய்யலாம் என்ற ஒரு அறிவுரையை அதில் வல்லுனர்களுடன் கற்று கொண்டு நடுவில் எந்த ஒரு கவனசிதறலும் இல்லாமல் வேலை பார்ப்பான். வெற்றியும் இவனுக்கு தான் கிட்டும், எனவே கடின உழைப்பை போடாமல் உங்களின் வாழ்க்கையை 20% முயற்சியில் கவனத்தோடு செய்யுங்கள்.


இவ்வாறு செய்து உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெற இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச்: