Translate

Followers

யார் இந்த உலகத்தில் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்?


உங்களில் எல்லார்க்கும் ஒரு கேள்வி ஒன்று இருக்கும் யார் இந்த உலகத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று அதற்கு வாருங்கள் இன்று ஒரு குட்டி கதையை பார்க்கலாம்.




ஒரு அழகிய காக்க ஒன்று இந்த உலகத்தில் சந்தோசமாக பறந்து கொண்டு இருந்தது, இந்த உலகத்தில் நான் தான் மிகவும் சந்தோஷமான பறவை என்று தன்னை நினைத்து கொண்டு இருந்த தருணத்தில் ஒரு அழகிய கொக்கை ஒன்று பார்த்தது! ஐயோ! இந்த கொக்கு பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது அப்படி என்றால் இது தான் உலகத்தில் மிக சந்தோஷமான பறவையாக இருக்க முடியும் என்று கொக்கு இடம் கேட்டது அதற்கு அந்த கொக்கு, காக்க அவர்களே நானும் அப்படி தான் நினைத்தேன் கிளி என்ற ஒரு பறவையை பார்ப்பதற்கு முன்பு என்று சொன்னது, உடனே காக்க கிளி இடம் சென்று கேட்டது நீ தானே இந்த உலகத்தில் சந்தோசமாக இருக்கிறாய் என்று அதற்கு அந்த கிளி இல்லை மயில் தான் இந்த உலகத்தில் மிகவும் சந்தோஷமான பறவை அதனை அழகை பார்க்க ஒரு ஊரே திரண்டு வரும் என்று சோகமாய் சொன்னது, உடனே காக்க மயில் இடம் சென்றது. அந்த மயில் இடம் அதே கேள்வியை கேட்டது அதற்கு அந்த மயில் சொன்னது...


அன்பு காக்கவே நானும் அப்படி தான் இருந்தேன் ஆனால் அப்படி நினைத்ததால் தான் என்னை சுதந்திரமாக இருக்க விடாமல் ஒரு கூண்டிற்குள் அடைத்து விடுகிறார்கள் என்று சொன்னது நானும் அடிக்கடி நினைப்பேன் நாம் காக்காவாக பிறந்திருந்தால் இந்த நேரம் வெளியில் சுதந்திரமாக இருக்கலாம் என்று.


அன்று தான் காக்காவிற்கு புரிந்தது நாம் கருப்பாக இருக்கிறோம் என்னை யாருக்கும் பிடிக்காது என்று பார்த்தால் ஒரு அழகிய மயில் என்னை போன்று ஆக வேண்டும் என்று சொல்கிறதே என்று சந்தோசமாய் வானில் பறக்கத்தொடங்கியது.


ஆம் நண்பர்களே நாம் நம்மை விட அழகில், அறிவில், நிறத்தில் ஒசத்தியாய் ஒருவரை பார்த்தால் நாம் ஏன் அவரை போல் இல்லை என்று ஏங்குவோம் அப்படி செய்யாமல் உங்களை நீங்கள் விரும்புங்கள் உங்களை விட வேறு எவரும் உங்களை நேசிக்க முடியாது, உங்களால் இதனை செய்ய முடியும் என்று உங்களுக்கு நீங்களே தெம்பு ஊட்டுங்கள், உங்களை வெற்றி பெற செய்யுங்கள் ஏன் என்றால் இந்த உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் ஒரு காரணம் உண்டு.


அதனால் உங்களை நீங்கள் விரும்புங்கள், சாதியுங்கள், நீங்கள் வெற்றி பெற வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


இனிய வாரம்.


நன்றி!