Translate

Followers

NO EXCUSES BOOK IN TAMIL

 

இந்த உலகத்தில் சாதித்தவர்கள் எல்லார்க்கும் ஒரு ஒத்துமையான விஷயம் ஒன்று இருக்கும் அது தான் ஒழுக்கம், அவர்கள் அவர்களின் திறமையினால் மேல் வந்தார்கள் என சொன்னாலும் அவர்கள் அவுங்களின் சுய ஒழுக்கத்தினால் மட்டுமே சாதித்தார்கள் என்று நான் சொல்வேன், சுயஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்க்கையில் நீங்களும் ஜெயிக்க வாருங்கள் இன்றைய "No Excuses!: The Power of Self-Discipline" புத்தகத்தை படிக்கலாம்.




1. ஒரு நாள் காரணம்:

ஒரு கூட்டத்தை கூட்டி அவர்களின் கனவினை கேளுங்கள், ஒவ்வொருவரும் பல பல கனவுகள் சொல்லுவார்கள் மேலும் அவர்களின் லட்சியங்களை சொல்லுவார்கள், அதுவே அவர்களிடம் நீங்கள் இந்த கனவை எப்பொழுது நிறைவேற்ற போகிறார்கள் என்று கேட்டால் எல்லாரும் நாளையில் இருந்து தொடங்கலாம் என இருக்கேன், இந்த மாதம் விட்டுவிட்டு அடுத்த மாதம் தொடங்கலாம் என இருக்கேன் என சாக்கு சொல்லுவார்கள், சாதித்தவர்கள் என்றைக்கும் சாக்கு கூறமாட்டார்கள், உன் வாழ்கைகைக்கு நீதான் பொறுப்பு என்பது போல் உன் கனவுகளுக்கும் நீ தான் பொறுப்பு ஆதலால் அதனை இன்றே செய். 


2. ஞாயற்றுகிழமை நன்மைகள்:

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை இதில் நமக்கு இரண்டு விஷயம் செய்ய ஆர்வம் இருக்கும் ஒன்று நம் வளர்ச்சிக்கு அடுத்து என்ன பண்ணலாம் என யோசித்து அதற்காக வேலை செய்தல், பின்னர் நண்பர்களுடன் வெளியே செல்லுதல். பெரும்பாலான மக்கள் இரண்டாவது ரகத்திலே இருப்பார்கள். இந்த ஒரு விஷயத்தில் தான் நாம் சுய கட்டுபாடாய் இருத்தல் வேண்டும், நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் ஆனால் நேற்றைய நாள் இன்று அமையாது என்பதை நினைவில் வைத்து வாழ்க்கையை நடத்துங்கள்.


3. உன்மேல் நம்பிக்கை:

வெற்றி பெற்ற பலர் அவர்கள் மீது உள்ள காதலில் தான் இன்று இவ்வளவு உயர்ந்துள்ளார், அதாவது உன்னை நீ நம்ப வேண்டும் என்னால் இதனை செய்ய முடியும் என்று, உன்னை நீ மதிக்க வேண்டும், உன்னை நீ ரசிக்க வேண்டும், உன்னுடன் பேசி உன்னை நீ ஊக்கு விக்க வேண்டும், உன்னை தவிர வேறுஎவரும் உதவ மாட்டார்கள் என நீ நம்ப வேண்டும், இந்த ஒரு வார்த்தை உனக்கு எப்பொழுது புரிகிறதோ அன்றில் இருந்து தான் உனக்கு வெற்றி கிடைக்கும் என இந்த புத்தகத்தை எழுதியவர் ஆணி தரமாக கூறுகிறார்.


4. முன்னுரிமை:

நாம் தினமும் என்ன செய்ய போகிறோம் என்ற ஒரு திட்டம் வேண்டும், திட்டமே இல்லாத வாழ்க்கை தண்ணீரே இல்லாத கடல் போன்று, இந்த நாளில் நாம் இதனை செய்ய போகிறோம் என்ற ஒரு திட்டம் வேண்டும்.

எந்த ஒரு திட்டம் நீங்கள் முதலில் செய்ய வேண்டும் என நினைத்து அதற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.


மேல் கூறியவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் இதனை ஒழுக்கத்துடன் செய்தால் நீ தான் உன் வாழ்க்கையின் ராஜா.

இதனை கடைபிடித்து உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெற வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்: