Translate

Followers

எது நிம்மதி?

 

நாம் அனைவரும் எதிர் பார்க்கும் ஒரே விஷயம் நிம்மதி தான். ஆனால் அந்த நிம்மதி நமக்கு எங்கே? எதிலே கிடைக்கிறது என தெரியாமல் இருக்கிறோம். ஆனால் இனிமேல் அந்த ஒரு யோசனை வராது. ஒருவரின் வாழ்க்கையில் நிம்மதி எங்கே உள்ளது என வாருங்கள் இன்றைய பதிவினில் படிக்கலாம்.




ஒரு முனிவரிடம் ஒரு மனிதன் என் வாழ்வில் அனைத்தும் உள்ளது ஆனாலும் மனம் திருப்தி அடையவில்லை மனதிற்கு நிம்மதி கிடைக்கவில்லை, சந்தோசம் இல்லை, இதற்கு ஒன்று சொல்லுங்கள் என்றான். அதற்கு அந்த முனிவர் உன் வீட்டிற்கு சென்று உனக்கு பிடித்த பொருள்கள் பிடித்த நபர்களுக்கு குடுத்த பொருள்களை ரெண்டு மூட்டையாக தூக்கிக்கொண்டு வா என்றான், இவனும் முனிவர் சொன்னது போல் எடுத்து வந்தான்.அப்பொழுது அங்கிருக்கும் இவர்கள் அந்த மூட்டையை தூக்கி கொண்டு ஆளுக்கு ஒருபுறம் சென்றனர். இவனும் பின்னாடி துரத்தி கொண்டு சென்றும் பயனிலை, உடனடியாக ஸ்வாமி பாருங்க உங்கள் முன்னரே என்னுடைய நிம்மதி பறிபோகி விட்டது என்று கூறினான். 


அதற்கு அந்த முனிவர் சிரித்து கொண்டு இத்தனை நாள் இதனுடன் தான் நீ இருந்து வந்தாய் அன்றைக்கு ஏன் உனக்கு நிம்மதி சந்தோசம் வரவில்லையா? என்று கேட்டார். 


அதற்கு இவன் முழித்தான்,


மனிதா உனக்கு ஆண்டவனின் அருளில் நல்ல தாய், தந்தை, நண்பர்கள் என அனைவரையும் கொடுப்பதோடு உனக்கு சில பொருள்களும் கொடுத்திருக்குகிறார் அதிலே தான் உன் நிம்மதியை விட வெளியில் தேடுவது இல்லை என்றார்.


ஆம் நண்பர்களே நாம் அனைவரும் இன்று இந்த தருணம் ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்தாலும் அதனையெல்லாம் தள்ளி வைத்து உங்களின் குடும்பத்தை பாருங்கள் அதுவே பெரும் நிம்மதியாகும்.


இந்த நாள் இனிய நாளாக அமைய வசந்தமிழின் வாழ்த்துக்கள்.