ஒரு நிமிடம் சார்.
ஒரு நிமிடம் சார்.
பொதுவாக எல்லார் வாழ்க்கையிலும் இந்த ஒரு நிமிடம் அதிகமாக விளையாடும், காலையில் எழுந்திருக்கும் பொழுது ஒரு நிமிடம் கழித்து எழுந்திருக்கலாம் என்று தோணும், எதாவது வேலை குடுத்தாள் ஒரு நிமிடம் கழித்து செய்யலாம் என்று சொல்வோம், படிக்கலாம் என்று நினைத்தால் ஒரு நிமிடம் கழித்து படிக்கலாம் என்று தோன்றும்.
இந்த தோன்றிய ஒரு நிமிடம் உங்களுக்கு தோல்வியை தான் தரும், இறுதியில் ஒரு நிமிடம் முன்னர் நாம் யோசித்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டோம் எனவும் ஒரு நிமிடம் கழித்து யோசிப்போம். அதனால் வாழ்க்கையில் எதையாவது செய்யவேண்டும் என்றால் அதனை இன்றே செய்! நன்றே செய்! என்பதை போல செய்யுங்கள்.
அப்துல் காலம் ஐயா சொல்வதை போல்:
எவன் ஒருவன் நினைத்தை நேரத்தை விட தாமதமாய் எழுந்திருக்கிறானோ; அவன் வாழ்க்கையிலும் தாமதமாகிறான்.
நீங்கள் தாமதமாக இல்லாமல் தன்னம்பிக்கையோடு இன்றே செயல் படுங்கள்.
அதற்கு வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
இனிய நாள்.