Translate

Followers

THE CHAMPIONS MIND BOOK IN TAMIL

 

ஒரு வெற்றியாளன் எப்பொழுதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறான் என்றால் அவன் எப்பொழுதும் வெற்றி பாதையின் நோக்கத்துடன் யோசித்துக்கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம், வாழ்க்கையில் நீங்களும் வெற்றியாளனை போல் யோசித்து வெற்றி பெற வாருங்கள் இன்றைய "THE CHAMPIONS MIND" என்ற புத்தகத்தை படிக்கலாம்.




௧. நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புங்கள்:


பொதுவாக "நம்புங்கள் நல்லதே நடக்கும்" என்று ஒரு கூற்று உண்டு, ஆனால் நாம் நம்ப மாட்டோம். ஒரு வேலை இப்படி நடந்துவிடுமோ? என்று ஒரு அச்சம் கொள்வோம், இப்படி பட்ட ஒரு அச்சம் தான் ஒரு சிற்றரசன் படை வீரர்களுக்கு போரிற்கு செல்லும் முன்னர் வந்தது, மன்னர் போரிற்கு செல்லும் முன்னர் எதிரி படை நம்பலை விட இரட்டிப்பாய் இருந்தாலும் நாம் மட்டுமே வெல்வோம் என்று நல்லதாய் பேசினார். இருப்பினும் போர்வீரர்களின் முகத்தில் நம்பிக்கை இல்லை, அதனால் அரசர் ஒரு நாணயத்தை எடுத்து இதில் தலை விழுந்தால் நாம் வெல்வோம், பூ விழுந்தால் நாம் தோற்போம், என்று கூறிவிட்டு நாணயத்தை சுழற்றினார். அவர் நினைத்ததை போல் அதில் தலை விழுந்தது போரிலும் இவர்களே வென்றனர், பின்னரே தெரிகிறது அந்த நாணயத்தில் இரு பக்கமும் தலை மட்டுமே உள்ளது என்று இதன் மூலம் அந்த அரசனின் நம்பிக்கையின் வெற்றியை நீங்கள் உணரலாம்.


௨. பயிற்சி :


மேல் உள்ளதை நீங்கள் பூர்த்தி செய்ய உங்களுக்கு பயிற்சி வேண்டும். உலகசாதனை படைத்தவர்களும் தொடர்ந்து பயிற்சி செய்யாவிட்டால் அவர்களால் அதனை தொடர முடியாது. நீங்கள் இன்று காணும் பலரின் வெற்றிகள் நல்ல ஒரு கடினமான பயிற்சியாலே கிடைத்தது.


௩. கெட்ட சிந்தனை:


என்ன தான் நாம் வெற்றியாளனாக இருந்தாலும், அதை கிடைப்பதற்கு முன்பு நமக்கும் கெட்ட சிந்தனைகள் வரும் அது மனித இயல்பு, ஆனால் அந்த சிந்தனையை மூளைக்குள் செலுத்தாமல் உங்களின் வேலையை நீங்கள் செய்து கொண்டிருந்தாலே கண்டிப்பாக வெற்றி உங்கள் கையில்.


மேல் உள்ளதை படித்து நீங்களும் இதே போல் நன்றாக சிந்தித்து ஒரு வெற்றியலைனாக வளர இந்த வசந்தமிழின்  வாழ்த்துக்கள்.


நன்றி! இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்