எது உண்மையான அதிர்ஷ்டம்?
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பலருக்கும் உண்டு.
ஆனால் நம்பினால் அனைவர்க்கும் அதிர்ஷ்டம் உண்டு என்பதை வாருங்கள் இன்றைய பதிவினில் படிக்கலாம்.
ஒரு ஆசிரியர் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பதோடு இல்லாமல் அவர்களின் வாழ்க்கைக்கு எது வேண்டும் என்ற நீதி நெறிகளும் தினமும் உபதேசமாய் கூறுவார், அப்படி ஒரு நாள் அவர் மாணவர்களை ஒரு காட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்றார் அங்கிருக்கும் ஒரு அணில் அந்த ஆசிரியரின் கைகளின் தவழ்ந்தது, ஆசியார் அதனை பார்த்து ஹே! அழகிய அணிலே இவ்வளவு அறிவாய், அழகாய் இருக்கிறாய்யே ஆனால் துரதிஷ்ட வசமாக அடுத்த வாரம் வெயில் காலம் தொடங்க போகின்றது நீ எப்படி உன்னுடைய உணவை உட்கொள்வாய்? என்ற கேள்விக்கு அணில் குடுகுடுவென்று ஒரு மரத்தின் அடியில் தோன்றியது, அதில் ஒரு கொய்யா பழம் கிடைத்தது, அங்கிருக்கும் மாணவர்கள் அனைவரும் ஆச்சிரியம் அடைந்தார்கள் ஆனால் ஆசியார் இது எனக்கு போதாது என்று சொல்ல, அணில் அங்கிருக்கும் அணைத்து குழிகளும் தோன்றின அங்கிருக்கும் அணைத்து குழிகளில் உள்லே ஒரு பழம் கிடைத்தது, அங்கிருக்கும் மாணவர் ஒருவர் இந்த அணில் அதிர்ஷ்டசாலி, தோண்டும் இடம் எல்லாம் பழம் கிடைக்கிறதே என்று சொன்னான்.
அதற்கு அந்த ஆசிரியர் மாணவ செல்வங்களே இதற்கு பெயர் அதிர்ஷ்டம் அல்ல உழைப்பு, இந்த அணில் வெயில் காலம் வருகின்றது என முன்கூட்டியே உணர்ந்து இவ்வாறு செயல் பட்டது அதே போல் நீங்களும் நான் இதை செய்ய வேண்டும், இது எனக்கு வேண்டும், இது இவ்வாறு அமைய வேண்டும், என்றால் உங்களின் கடின உழைப்பை போடுங்கள் வெற்றி உங்களுக்கு அதிர்ஷ்டமாக வந்து சேரும்.
வாழ்க்கையில் உங்களின் உழைப்பு தான் எப்பொழுதும் நிரந்திர அதிர்ஷ்டமாகும்.
இந்த நாள் இனிய நாளாக அமைய வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
நன்றி.