Translate

Followers

THINKING FAST AND SLOW BOOK IN TAMIL

 

பொதுவாகவே எல்லோரும் நினைத்து வருத்தப்படும் ஒரே விஷயம் நான் இதை அவசரத்தில் செய்ததால் இந்த நிலைமைக்கு தள்ள பட்டேன், என்னுடைய அவசர முடிவால் இப்பொழுது இந்த நிலைமையில் உள்ளேன் என்று தான்.


வாழ்க்கையில் அவசரப்படாமல் பொறுமையாக சரியான முடிவுகளை எப்படி எடுப்பது என்று இன்றைய "THINKING FAST AND SLOW" புத்தகத்தில் இருந்து வாருங்கள் பார்க்கலாம்.



1. சோம்பேறி மூளை:


நூறில் தொன்னூறு மனிதர்களின் மூளை சோம்பேறியாக செயல் படுகிறது என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறார்கள். பொதுவாக நமது மூளை எப்பொழுதும் இரண்டு வகை படும், ஒன்று உடனடியாக இதில் இருந்து தப்பிக்கலாம் என்று முடிவெடுப்பது ஒரு ரகம், நிறுத்தி நிதானமாக யோசித்து சரியான முடிவுகளை எடுப்பது இன்னோரு ரகம்.


இதில் நாம் பலரும் முதல் ரகத்திலேயே உள்ளோம் அதனாலேயே நம் மூளை எப்பொழுதும் சோம்பேறி தனமாகவே உள்ளது.


உதாரணத்திற்கு: ஒரு பெரும் தொழிற்சாலையில் கேஸ் கசிவடைந்ததால் (Gas Leakage) எல்லோரும் பயந்து அந்த இடத்தில இருந்து தப்பி ஓட்டம் அடைந்தனர். ஆனால் அந்த தொழிற்சாலையின் முதலாளி அந்த கசிவு எங்கிருந்து வருகிறது என்று பார்த்து அதனை அடைத்து விட்டு அங்கிருக்கும் ஜன்னல்களை திறந்து விட்டு சென்றார், இப்படி பிரச்னையை கண்டு ஓடாமல் அதனை தீர்க்கும் வழியினை நிதானமாக யோசித்தால் கண்டிப்பாக அதில் இருந்து வெளி வரலாம், நிதானமாக யோசித்ததாலேயே அங்கு அவர் முதலாளியாக உள்ளார் யோசிக்காமல் ஓடியதாலே இன்றும் பலர் அவருக்கு கீழ் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.


2. ஒரு கட்டத்திற்குள் தள்ளி விடுகிறார்கள்:


நம் மூளை எப்பொழுதும் கெட்ட விஷயங்களை தான் தேடி செல்கிறது கெட்ட விஷயங்களை தான் யோசிக்கவும் செய்கிறது.


உதாரணத்திற்கு: 32 பக்கம் கொண்ட செய்திதாளில் நம் கண்கள் முதலில் படிக்கச் செல்வது கொலை, கொள்ளை சம்பவங்களே, ஏன் என்றால் அதில் தான் ஆர்வம் அதிகரிக்கும், மேலும் இந்த ஒரு வித்தையை தான் இன்று அனைவரும் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அதனை படிப்பதால் உங்களுக்கு அதன் போக்கில் யோசித்து மனம் சோர்வடைய கூடும். மேலும் அந்த ஏதோ ஒரு விஷயம் உங்களையே அறியாமல் யோசித்து வருத்தமடையவும் கூடும். ஆதலால் கெட்ட விஷயத்தை பார்த்து கொள்ளுங்கள், கேட்டுக்கொள்ளுங்கள், யோசித்து கொள்ளாதீர்கள். அப்படி உங்களிடம் யோசனை வந்தால் உடனடியாக யோசித்து வருத்தப்படாமல் அதற்கு என்ன செய்தால் அதில் இருந்து வெளிவரலாம் என்று சிந்தித்து செயல் படுங்கள்.  


என்றும் நம் நல்ல சிந்தனையே நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும், நல்ல சிந்தனைகளை யோசிக்க வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: