வாழ்க்கையில் எந்த ஒரு திறன் மிகவும் முக்கியம்?
வாழ்க்கையில் எந்த ஒரு திறன் மிகவும் முக்கியம்? வாருங்கள் இன்றைய பதிவினை படிக்கலாம்.
காட்டு விலங்குகளுக்கு ராஜாவாக சிங்கம் உள்ளது, ஆனால் குருவிகளுக்கு ஒரு ராஜா என்று யாரும் இல்லையே என்ற கேள்வி வந்தது, அதற்கு பறவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து யார் அதிக உயரத்தில் பறக்கிறார்களோ அவர்களே பறவைகளின் ராஜா என ஒரு முடிவிற்கு வந்தனர், அதற்கு கழுகு எப்படியும் என்னைவிட அதிக உயரத்தில் பறப்பவர் இந்த கூட்டத்தில் யாரும் இல்லை; அதனால் போட்டியின்றி என்னை தேர்வு செய்யுங்கள் என கர்வகமாக கூறியது, அதற்கு அதெப்படி எல்லா நேரமும் ஒரே மாதிரி அமையுமா? போட்டியை வையுங்கள் என ஒரு கீச் கீச் குரல் வந்தது, அது வேறவனும் இல்லை ஒரு சிட்டு குருவி தான், கழுகிற்கு ஒரு சிட்டு குருவி நம்பலை கேலி செய்கிறதே என்று கோபத்துடன் போட்டியில் கலந்து கொள்ள முடிவுக்கு வந்தது.
மறுநாள் போட்டியும் நடந்தது நினைத்ததை போல் கழுகு வானத்தில் அதிக உயரத்தில் பறந்தது மற்ற பறவைகள் எல்லாம் கழுகிற்கு கீழே பறந்து கொண்டு இருந்தது, போட்டி நிறைவடையும் நேரத்தில் கழுகு மெல்ல கீழே இறங்க இந்த சிட்டு குருவி கழுகின் காலில் ஒற்றி கொண்டு கழுகு கீழே சென்ற தருணத்தில் முயன்று மேலே சென்று கழுகின் தலையில் உட்கார்ந்து கொண்டு போட்டியை வென்றது, மேலும் பறவைகளின் குளத்திற்கு ராஜாவாகவும் முடிசூடியது.
இந்த கதையினால் உணரப்படும் பெரும் செய்தி என்னவென்றால் நாம் எவ்ளவு தான் உயரத்திற்கு சென்றாலும் நமது தலைகனமாக ஒரு பொழுதும் இருக்க கூடாது, "நான்" என்ற தலைகனம் எப்பொழுது ஒருவனுக்கு வருகிறதோ அவன் அப்பொழுது வீழ்கிறான் என வாழ்க்கை நீதி கூறுகிறது.
உங்களின் வாழ்க்கைக்கு முக்கிய திறன் "தன்னடக்கமே" எவன் ஒருவன் எல்லா சூழ்நிலையிலும் தன்னடக்கமாக இருக்கிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்கிறான்.
தன்னடக்கமாக இருந்து வாழ்க்கையில் வெற்றி பெற இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
இனிய நாள்.