Translate

Followers

THE HAPPINESS ADVANTAGE BOOK IN TAMIL

 

பொதுவாகவே நம்ப தினமும் பல திட்டங்கள் போடுவோம், இன்றைக்கு நாம் இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று. ஆனால் நாள் இறுதியில் நம் வேலைமுடித்தவுடன் தொலைக்காட்சியை பார்த்து விட்டு, கைபேசியில் வெட்டிக்கதைகளை பேசிவிட்டு உறங்கிக்கொண்டு கண்களை மூடுவதற்கு ஐந்து நிமிடம் முன்னர் வருத்தப்பட்டு தூங்குவோம். இதனால் நம் தூக்கமும் கெட்டு போகும் இதற்கெல்லாம் முக்கிய காரணம் நம் சோம்பேறித்தனம் தான், இந்த சோம்பேறித்தனத்தை வைத்துக்கொண்டே வாழ்க்கையில் நாம் நினைத்ததை செய்து முடிப்பது எப்படி என்று வாருங்கள் இன்றைய "THE HAPPINESS ADVANTAGE" புத்தகத்தில் இருந்து வாங்க படிக்கலாம்.




1. சோம்பேறித்தனத்தை கண்டறிவது எப்படி:


சோம்பேறித்தனத்தை கண்டறிவது எப்படி என்றால் அனைவரும் எளிதாக சொல்லிவிடுவார்கள், ஆனால் அதனை யாரும் எப்படி என்று உணர மாட்டார்கள். 


உதாரணத்திற்கு: நீங்கள் தீனமும் இரவில் ஒரு புத்தகத்தை படித்து விட்டு உறங்கலாம் என்ற ஒரு நல்ல முடிவை எடுக்குறீர்கள் என்றால், அதனை ஒரு நான்கு நாளைக்கு கண்டிப்பாக கடைபிடிப்பீர்கள் ஆனால் ஐந்தாவது நாள் புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அந்த புத்தகம் உங்களது அறையில் இருக்கும் அதனை எடுத்து படிக்கலாமா? என்ற ஒரு எண்ணம் உருவாகும். இந்த ஒரு எண்ணத்தையே சோம்பேறி என்று நாம் உணருகிறோம். இந்த சோம்பேறித்தனத்தை சாதகமாக்கி எப்படி இந்த விஷயத்தை செய்து முடிக்கலாம் என்று பார்க்கலாம்.


2. இருபது வினாடி விதி :

எப்படி ஒரு பழக்கத்தை கடைபிடிக்க இருபத்தி ஒரு நாள் விதி (21 Days rule) இருக்கிறதோ அதே போல் உங்களின் தினசரி செயல்களை செய்ய இந்த இருப்பது நொடி விதி (20 Seconds rule)  இருக்கிறது. 

முதல் உள்ள புள்ளிபடி புத்தகத்தை ஐந்தாவது நாள் எடுக்காமல் அவன் தினமும் செய்கின்ற வேலையை செய்து விட்டு அதாவது தொலைக்காட்சியை பார்த்துவிட்டு நேரத்தை வீண் அடித்து அவன் உறங்கச்செல்கிறான். இதனை மாற்ற நாம் இருபது நொடி விதியை பயன் படுத்திகிறோம், எப்படி ஒரு புத்தகம் நமது அறைக்கு சென்று எடுக்க நமக்கு இருபத்தி நொடி ஆகுமோ, அதே போல் நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சியின் ரிமோட் ஐ எடுத்துக்கொண்டு உங்களின் அறையில் வைத்து விடுங்கள் அதே போல் உங்களது புத்தகத்தை நீங்கள் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள், கண்டிப்பாக அந்த ரிமோட்டை எடுத்துக்கொண்டு வர சோம்பேறிதனம் கொண்டு, அதற்கு நாம் இந்த புத்தகத்தை படிக்கலாம் என்ற ஒரு எண்ணம் வந்து விடும்.


இந்த உதாரணம் புத்தகத்திற்கு மட்டும் போதாது, நீங்கள் அதிகமா கைபேசியில் கேம் விளையாடுபவர் என்றால் அந்த விளையாட்டை விளையாடி முடித்த பின்னர் அதனை அழித்து (Uninstall) விடுங்கள், அடுத்த முறை நீங்கள் விளையாடும் பொழுது அதனை மறுபடியும் ஏற்றிக்கொண்டு நாம் விளையாட வேண்டுமா? என்ற ஒரு சோம்பேறி எண்ணம் உங்களின் கேம் அடிமையை இருந்து வெளிவர செய்கிறது.


இதே போல் நீங்கள் செய்யும் எந்த ஒரு காரியத்தையும் உங்களது சோம்பேறித்தனத்தை வைத்துக்கொண்டு முன்னேறலாம் என்று இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஷாவ்ன் கூறியிருகிறார்.


இந்த புத்தகத்தினை படித்து உங்களது வாழ்க்கையில் பயன் படுத்த இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள் 


மேலும் இந்த புத்தகத்தினை படிக்கச்:  👇




வசந்தமிழை பார்க்க: 

Follow us: