Translate

Followers

MAKE IT STICK BOOK IN TAMIL

 பொதுவாகவே நம்மில் பலரும் பாதிக்க படுகின்ற ஒரே விஷயம் நியாபக மறதி தான், அதுவும் பரிட்சையில் ஆரம்பித்து இன்றைய காலக்கட்டம் வரை தினமும் மறதியினால் அவஸ்தை படுகிறோம். இதனை சரி செய்ய வாருங்கள் இன்றைய புத்தகத்தை படிக்கலாம்.




அதிகமாக நியாபகம் வைத்திருக்க எப்பொழுதும் கடின உழைப்பை போடாமல் அதற்குரிய சூட்சமத்தை தெரிந்து கொண்டால் எளிதாக எதையும் நியாபகம் வைத்து கொள்ள முடியும், 


௧. பொதுவாக படித்ததை திரும்ப திரும்ப படிக்காமல் அதனை திரும்ப நியாபகம் படுத்துவோர்களுக்கு நன்றாக மனதில் பதியும், இதே போன்று தான் எல்லாம், ஒரு விஷயத்தை நாம் யோசிக்கும் பொழுது தான் உங்களின் மூளையில் நியாபக திறன் அதிகரிக்கும், அதனால் படித்து கொண்டே இருக்காமல் படித்ததை திரும்ப நினைவு கொள்ள முயற்சியுங்கள் (RECALL)


௨. புதியதாக எதாவது கற்றுக்கொள்ளும் பொழுது உங்களின் மூளை ஒரு சில வளர்ச்சி அடையும் என அறிவியலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எனவே உங்களுக்கு புதிதாக கற்கும் ஆர்வம் இருந்தால் புதிதாக கற்க முயற்சியுங்கள்.


௩. மேல் உள்ளவற்றை கற்கும் முன்னர் அதனுடைய முன்னுரையை முழுதாக படியுங்கள் அப்பொழுது தான் நீங்கள் புதியதாக படிக்கும் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சலிப்பு தன்மை இருக்காமல் அடுத்து என்ன என்ன என்று படிக்கச் ஆர்வமாக இருக்கும், அந்த ஆர்வம் தான் உங்களின் மூளையில் நன்றாக பதியும்.


௪. என்றைக்காவது ஒரு மிகப்பெரிய விஷயத்தை படிக்குறீர்கள் என்றால் அதனை ஒரு பத்து வயது குழந்தைக்கு நீங்கள் படித்ததை விளக்க முயற்சியுங்கள் நீங்கள் தடுமாறாமல் அவர்களுக்கு புரியும் படி விளக்கினால் நீங்கள் நன்றாக அதை புரிந்து வைத்திருக்குறீர்கள் என்று அர்த்தம், தடுமாறினாள் இன்னும் உங்களுக்கு பயிற்சி வேண்டும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.


௫. படித்த ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்யாமல் அதே போன்று உள்ளதை பயிற்சி செய்யுங்கள், அதாவது கணக்கு பாடத்தில் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப செய்யாமல் அதனுடைய வழிமுறையை வைத்து கொண்டு அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் மற்ற கேள்விகளை செய்ய முயற்சி எடுங்கள்.

மேல் உள்ள அனைத்தையும் நீங்கள் பயன் படுத்தினால் உங்களின் வாழ்க்கையில் மறதி என்பதை மறந்துவிடலாம்.அதற்கு இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை படிக்க: