வாழ்க்கையில் வெற்றியை சுவைப்பது எப்படி?
வாழ்க்கையில் நான் என்ன தான் செய்யதாலும் வெற்றி என்பது எனக்கு ஒரு ஏக்கம் ஆகவே இருந்து கொண்டிருக்கிறது அந்த ஏக்கத்தை போக்கி வெற்றியை எப்படி சுவைக்கலாம் என்ற ஒரு தாரக மந்திரத்தை கற்கலாம் வாங்க.
வெற்றி என்பது ஒரு வகையான போதை, அந்த வெற்றி அனைவருக்கும் கிடைப்பதல்ல என்பது தான் உண்மை, அந்த வெற்றியாளனை கூர்ந்து கவனித்தால் அதாவது அவனுடைய பழைய வரலாற்றை எடுத்து பார்த்தல் அவன் இந்த வெற்றிக்காக பல தோல்விகளை சந்தித்து வந்திருப்பான், பல தோல்விகளை சந்தித்து வருபவனுக்கே வெற்றியை ரசிக்க தெரியும் மேலும் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ளவும் தெரியும். தோல்வியே அடையாமல் வரும் வெற்றி நிரந்தர வெற்றி அல்ல என்பதற்கு உங்களின் வாழ்க்கையில் நடந்த பல வெற்றிகள் கூற்றாகும்.
அதனால் வெற்றிக்காக போராடும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லிக்கொள்ளுங்கள்:
"It's okay to FAIL"
"தோற்றால் பரவாயில்லை"
இந்த மந்திரத்தை உண்மையாக நீங்கள் ஏற்றுக்கொண்டாலே நீங்கள் வெற்றி பெற்றதற்கு சமம்.
வெற்றி பெற வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
இனிய வாரம்.