Translate

Followers

AS A MAN THINKETH BOOK IN TAMIL

 பொதுவாகவே நம்ப எல்லாரும் கவலை படுகின்ற ஒரே விஷயம் நம்ப வாழ்க்கையோட பொறுப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வது தான், அதை தெரிஞ்சிக்க ரொம்பவே கஷ்ட படுவோம், அப்படி கஷ்ட பட்டு பொறுப்புகளை கண்டு அறிந்த பின்னர் அதை எப்படி கையாளுவது என்று பலருக்கும் கேள்விகள் உண்டு, உங்களது வாழ்க்கையில் இது தான் உங்களின் பொறுப்பு என தெரிந்தும் அதை எப்படி கையாள வேண்டும் என இன்றைய "AS A MAN THINKETH" புத்தகத்தில் இருந்து வாங்க படிக்கலாம்.


1. உங்களின் தோட்டம் :

ஒரு அழகிய பூந்தோட்டத்தில் நல்ல உரங்கள் போட்டால் தான் அங்கு நல்ல செடிகள் வளரும் அதுவே ஒரு சின்ன கழிவினை செலுத்தினால்கூட மொத்த பூந்தோட்டமே விஷ செடிகளாய் மாறி விடும். அது போல் தான் வாழ்க்கை உங்களது வாழ்க்கையை ஒரு தோட்டமாக நினைத்து கொள்ளுங்கள் , ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு, இந்த தோட்டம் உங்களின் கண்களுக்கு தெரியாது, கண்களுக்கு தெரியாத தோட்டத்தில் எப்படி விதைகளை? உரங்களை போடுவீர்கள்? என்று நினைத்தால் அதற்கு பதில்.


ஆம்! தோட்டம் என்று குறிப்பிடுவது உங்களின் மூளை தான், நீங்கள் தினசரி எதைப்பற்றி சிந்திக்கிறீர்கள் என்று உங்களுக்கே சில சமையம் தெரியாது அந்த சிந்தனைகள் கெட்ட உரமாக உங்களின் மூளைக்குள் சென்று விடும், அதனால் உங்களின் உரத்தை தூய்மையாக அதாவது உங்களின் சிந்தனைகளை நல்லதாக வைத்து கொள்ளுங்கள்.


2. தியாகம்:

வாழ்க்கையில் சில தியாகங்களை செய்தவர்கள் தான் இன்று பெரும் வெற்றியாளனாக இருக்கிறார்கள், உங்களின் உடலை சீராக வைத்திருக்க தினமும் உங்களின் பிடித்த உணவுகளை தியாகம் செய்ய வேண்டும், அதே போன்று தான் வாழ்க்கையும். கடுமையாக உழைத்திட உங்களின் தினசரி வாழ்வில் அதிக நேர தூக்கம், உங்களின் கைபேசி என அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும்.


3. கனவுகளின் உண்மை:

இன்று காணப்படும் பல பொருள்கள் பலரின் கனவுகளாக இருந்தவை தான், அதனால் முடியும் என்று ஒரு சொல்லிற்கு முடியும் என்றே சொல்லுங்கள், இந்த முடியும் என்ற சொல், நாம் அந்த செய்யலை எப்படியாவது முடித்துவிடலாம் என உங்கள் மனம் நினைக்கும், அதனால் எந்த ஒரு செயலிலும் முடியும் என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்துங்கள்.


மேல்கூறியவற்றை செய்து உங்களின் வாழ்கை பொறுப்புகளை வெற்றிகரமாக செய்ய இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: 👇