GETTING THINGS DONE BOOK IN TAMIL
பொதுவாகவே நம்ப என்ன தான் வாழ்க்கையில் முன்னேறணும் என்று நினைத்தாலும் நம்மளோட சோம்பேறித்தனம் நம்பலை ஒவ்வொரு தடவையும் தோற்கடித்துக்கொண்டு தான் இருக்கு. இதனை மாற்ற, அதாவது சோம்பேறித்தனத்தை தோற்கடித்து வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை செய்ய வாருங்கள் இன்றைய "GETTING THINGS DONE" என்ற புத்தகத்தை படிக்கலாம்.
௧. சேகரிப்பு:
நமது எண்ணங்கள் நமது சிந்தனைகள் நிமிடத்திற்கு ஒன்று சிந்தித்து கொண்டு இருக்கும், அதில் நல்ல சிந்தனைகளும் அவ்வப்பொழுது வந்து கொண்டு இருக்கும் இதை செய்தால் நல்லா இருக்குமே என்றும் தோன்றும். அந்த சிந்தனைகளை தோன்றும் பொழுதே ஒரு புத்தகத்தில் எழுதி வெய்யுங்கள், மேலும் நீங்கள் இன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும் என்றும் தினமும் எழுதி வாருங்கள் (TODO LIST)
உதாரணத்திற்கு: நீங்கள் மளிகை கடைக்கு இருபது பொருள் வாங்க சீட்டில் இழுத்துக்கொண்டு போங்கள், மேலும் அதே மளிகை கடைக்கு ஒரு ஐந்து பொருள் வாங்க உங்களின் நினைவில் வைத்து கொண்டு போங்கள், கண்டிப்பாக அந்த ஐந்து பொருளில் ஒரு பொருள் விட்டுவிடுவோமா என்ற சிந்தையோடு பரபரப்பாக செல்வீர்கள், ஆனால் சீட்டு கொண்டு செல்லும் பொழுது நிதானமாக செல்வீர்கள், அந்த சீட்டு போன்று தான் நான் முதலில் சொன்னதும்.
௨. செயலாக்கம்:
மேல் உள்ள திட்டத்தை நிறைவேற்ற சின்ன சின்ன செயலாக்கத்தை எழுத வேண்டும், இதை எவ்வாறு செய்யலாம் எப்பொழுது செய்யலாம், எந்த நேரத்தில் செய்யலாம் என்று.
௩. ஏற்பாடு:
செயலாக்கம் செய்த பின் அந்த செயலை எவ்வாறு செய்யலாம் என்று ஏற்பாடு செய்ய வேண்டும், கண்டிப்பாக உங்களின் செயல்களில் சிறிய செயல், பெரிய செயல் என்று இருக்கும், அந்த சிறிய செய்யலை முன்னரே முடித்து விடுங்கள். மேலும் அந்த பெரிய செயல்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செய்யலாம் என நேரத்தையும் குறிப்பிடுங்கள்.
௪. செயல்:
மேல்கொண்ட வற்றை வெறும் புத்தகத்தில் எழுதுதல் மட்டும் இருக்காமல் அதனை செய்ய வேண்டும், அதனை செய்ய நீங்கள் சரிபார்ப்பு பட்டியல் போன்று போட்டுகொண்டு எதையெல்லாம் முடித்துகொண்டுளோம் என்று அதில் டிக் செய்து விட்டு வாருங்கள், அந்த டிக் ஐ பார்த்துக்கொண்டு உங்களுக்கு அடுத்த செயல் செய்யலாம் என்ற ஒரு உத்வேகம் கிடைக்கும்
௫. விமர்சனம்:
எப்பொழுதும் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் ஒரு விமர்சனம் இருப்பது நல்லது ஏனெனில் அப்பொழுது தான் தெரியும் நீங்கள் செய்யும் செயல் சீரான பாதையில் சென்று கொண்டு இருக்கிறதா என்று.
மேலுள்ள ஐந்து புள்ளிகளை படித்து மட்டும் செல்லாமல் இன்றிலிருந்து செயல் படுத்தினால் நீங்களும் உங்களது சோம்பேறித்ததிலிருந்து வெளிவந்து நான் இன்றைக்கு இந்த வேலையை முடித்தேன் என்று நிம்மதியாக இருக்கலாம். மேலும் இதனை செய்து உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெற வசந்தமிழின் வாழ்த்துக்கள்
மேலும் இந்த புத்தகத்தினை முழுவதும் படிக்கச்: 👇