THE THREE SECONDS
பொதுவாக நம் வாழ்க்கையில் சவாலான ஒரு விஷயம் "முடிவுகள்" எடுப்பது தான், அந்த முடிவுகளே இன்றைய காலகட்டங்களில் பெரிதாக யோசிக்க படுகின்றன, ஒரு தவறான முடிவு ஒருவரின் வாழ்க்கையை வீணடிக்கலாம், ஒரு சரியான முடிவு ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம், ஆகவே நீங்கள் உங்களின் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அந்த முடிவுகள் சரியா தவறா என்பதை இன்றைய "3SECONDS" என்ற புத்தகத்தில் இருந்து வாங்க படிக்கலாம்.
ஒரு நிறுவனத்தில் சோமு, ராமு என இருவர் இருந்தனர், அந்த இருவரும் ஒரே கல்வி, மற்றும் ஒரே திறமை கொண்டுள்ளவர், சோமு எந்த ஒரு கேள்விக்கும் பளிச்சென்று பதில் கூறுவார், ஆனால் ராமு ஒரு மூன்று வினாடிகள் பொறுத்தே பதிலளிப்பார், இவர்களுக்கு அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு வேலையை நாளைக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சோமு ஒரே நாளில் இந்த வேலை கடவுளால் கூட செய்ய முடியாது இதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டு சென்றார். இதேவாறு அந்த முதலாளி ராமு வை அழைத்து பேசினார், ராமுவிற்கும் இது முடியாத காரியம் என்று தெரியும் ஆனால் இதை நாம் செய்தால் நமக்கு நிறைய நன்மைகள் நடப்பதோடு, இந்த சவாலை ஏற்றுக்கொண்டால் நாமும் நிறைய விஷயங்கள் கற்கலாம் என இதனை பற்றி மூன்று வினாடிகள் சிந்தித்து, என்னால் முடியும்! என்று தான் முதலாளிக்கு நம்பிக்கையான பதிலும் அளித்தான், அதே போல் ராமு அதை செய்தும் முடித்தான். பின்பு அந்த நிறுவனத்தில் பதவிஉயர்வு வரும் வேளையில் முதலாளிக்கு ராமுவின் பெயர் மட்டுமே நியாபகம் வந்தது சோமு வின் பெயர் மெல்ல மறந்தும் போனது.
இந்த உதாரணத்தை போல், நம் தினசரி நடக்கும் வேலைகளில் உடனே பதில் அளிக்காமல் சற்று நிதானமாக மூன்று வினாடிகள் சிந்தித்து யோசித்தால் வெற்றி நிச்சயம், மேலும் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை நினைத்து வருத்தமும் படாமல் இருக்கலாம்,
இந்த மூன்று வினாடி ரகசியம் உங்களின் வேலைகளில் மட்டுமல்ல நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பேசும் பொழுதும், சாலைகளில் நடக்கும் சண்டைகளிலும் , பல சிக்கலான முடிவுகளுக்கும் இது உதவியாக இருக்கும்.
மேலும் இந்த மூன்று வினாடி கழித்து எடுக்கும் முடிவுகள் உங்களின் வாழ்க்கையை மாற்றவும் கூடும்.
மேலும் இப்பொழுதும் நீங்கள் இந்த பதிவினை படித்து முடித்து அப்படியே செல்லாமல் ஒரு மூன்று நிமிடம் சிந்தித்து உங்கள் வாழ்க்கைக்கான முடிவுகளின் பழக்கத்தை தொடரலாம் என யோசியுங்கள்,
அதனை யோசிக்க இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச்: 👇