Translate

Followers

HOW TO CREATE A NEW HABIT

 ஒரு நல்ல பழக்க வழக்கம் தான் ஒரு மனிதனின் வெற்றியை தீர்மானிக்க செய்கிறது! அதனை எப்படி உருவாக்கலாம் என்பதை வாங்க படிக்கலாம்.




முதலில் அதனை தூண்டிவிட வேண்டும், அதனை தூண்டிவிடுமாறு எதையாவது நீங்கள் செய்ய வேண்டும், பின்பு அதனை நீங்கள் தினமும் இந்த நேரத்தில் நான் செய்வேன் என அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும், பின்பு பரிசு, இந்த பரிசு தான் உங்களின் வெற்றி என இதனை கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைந்து திரும்ப அதனை செய்ய வேண்டும்.


உதாரணத்திற்கு: 


உங்களின் லட்சியம் - உடல் எடையை குறைதல்!


தூண்டுதல் - தினமும் காலை எழுவதற்கு அலாரம் வைக்க வேண்டும், பின்பு எழுந்ததும் உங்களின் படுக்கைக்கு கீழ் இரண்டு டம்புள்ஸ் ஐ வைக்க வேண்டும்.

வழக்கமாக செய்ய: இதனை பார்த்ததும் உங்களுக்கு வழக்கமாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் வரும். மேலும் இதனை விடாமல் செய்ய வேண்டும்.

பரிசு: இவ்வாறு செய்து வந்தால் உங்களின் எடை கண்டிப்பாக குறையும், அதனை கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைந்து திரும்ப அதனை செய்ய வேண்டும்.


இவ்வாறு நீங்கள் பின்பற்றினால், உங்களின் புதிதாக செய்யும் பழக்க வழக்கத்தில் வெற்றியாளராக வருவீர்கள் என நம்புகிறோம். அவ்வாறு சாதிக்க இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள் 


படித்தமைக்கு நன்றிகள் பல.