Translate

Followers

THE ATOMIC HABITS BOOK IN TAMIL

 

பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும்  ஒரு லட்சியம் இருக்கும், ஆனால் அதனை முழுதாக நம்பி செயல் படுத்தியவர்களே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள், உங்களது தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்து  நீங்களும் உங்களின் இலட்சியத்தை ஜெயிக்க வாருங்கள் இன்றைய "ATOMIC HABITS" புத்தகத்தை படிக்கலாம்.




1. ஒரு சதவீத முயற்சி (1%)


ஒரு விரல் புரட்சி போன்று, இதுவும் ஒரு வகையான முயற்சி தான், உங்களின் இலட்சியத்தை முடிவு செய்த பின்னர் அதற்கான வழிகளை கண்டறியுங்கள்,  பின்பு அதனை ஒரு முறையே உங்களின் கடின உழைப்பை போட்டு முடிக்காமல், தினமும் ஒரு சதவீதம் அளவு செய்யுங்கள், ஒரு குறிப்பிட்ட நாள்களில் அதன் விளைவு  அதிசயமாக  நடக்கும், அது நடக்கும் வரை நீங்கள் விடாமல் செய்து கொண்டே இருங்கள்.


உதாரணத்திற்கு:  

ஒரு சிற்பி ஒரு கல்லினை தனது சுத்தியினால் நூறு அடிகள் அடித்து கொண்டு இருக்கிறான் ஆனால் அது உடையவில்லை இப்பொழுது நூற்றியொன்றாவது அடி அடித்ததும் அந்த கல் இரண்டாக உடைந்தது, அதன் அர்த்தம் அவன் கடைசியில் அடித்த அடி பலம் என்பது அல்ல, அவன் தனது முயற்சியினால் நூறு அடிகளை அடித்தது தான். இதே போல் நீங்களும் உங்களின் லட்சியத்தை தினமும் உங்களது சுத்தியினால் அடித்து கொண்டே இருங்கள்.


2. சுற்று சூழலை மாற்றுதல்:


முதலில் கூறியவற்றையை கடைசி வரையில் விடாமல் செய்ய ஒரு மனஉறுதி வேண்டும், ஆனால் அந்த மனஉறுதி தினமும் கிடைக்காது, அதனை தேடாமல் நீங்களே செய்ய, நீங்கள் இருக்கும் இடத்தின் சுற்றுசூழலை மாற்றி விடுங்கள், 


உதாரணத்திற்கு: 

நீங்கள் தண்ணீர் குடிக்க தினமும் மறக்குறீர்கள் என்றால், உங்களின் அறையில் நீங்கள் திரும்பும் இடெமெல்லாம் ஒரு தண்ணீர் பாட்டில்கள் வையுங்கள், இதே போன்று உங்கள் லட்சியத்திற்காக தேவையை அறிந்து உங்களின் சுற்று சூழலை மாற்றுங்கள்.


இந்த இரண்டையும் பின்பற்றி நாள் உங்களது லட்சியம் கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும், அதனை நிறைவேற இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தினை முழுவதுமாக படிக்கச்: 👇