தியானத்தின் மகிமை
வாழ்க்கையில் நம்மளால மட்டும் இன்னும் எதுவும் சாதிக்க முடியவில்லை, அந்த வெற்றியை எட்ட முடியவில்லை நானும் என்ன என்னவோ செய்கிறேன், ஆனா வெற்றிக்கான வழியை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
நீங்கள் தினமும் ஓய்வு எடுக்குறீர்கள் அது உங்களின் மனதிற்கு, உடலிற்கு மட்டுமே ஓய்வு தரும், ஆனால் நீங்கள் தினமும் சிந்தித்து செயல் படுகின்ற மூளைக்கு ஓய்வு கொடுப்பதில்லை, அதை தியானம் மூலம் எப்படி தரலாம் என்று பார்க்கலாம் வாங்க
தியானம் பண்ணுவதில் நிறைய பயன்கள் உண்டு, அறிவியலில் தியானம் பண்றவர்கள் வாழ்க்கையில் அதிக வெற்றி பெறுகிறார்கள் என பேச படுகிறது, இன்றைய சாதனையாளர்கள் அனைவரும் தியானத்தின் வழியிலேயே அவர்களின் வெற்றியை சுவைக்கிறார்கள்
தியானம் எவ்வாறு பண்ணலாம்? எங்கே பண்ணலாம்?
தினமும் தூங்குவதற்கு ஒரு பதினைந்து மினிடம் முன்னர் ஒரு அமைதியான அறையில் நிமிர்ந்து நேராக ஒரு துணியில் அமர்ந்துகொண்டு உங்களது மூச்சி காற்றினை உணருங்கள், அந்த உணருதல் அவ்வளவு எளிமையாக உணர முடியாது அதற்கு நிறைய காலம் வேண்டும், நீங்கள் முதல் முதலில் பன்கின்ற பொழுது உங்களின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் ஓடும், ஆனால் அதை நாள்தோறும் பன்கின்ற பொழுது உங்களின் மூளையின் அளவு அதிகரிக்கும் என அறிவியல் சொல்கிறது, மேலும் உங்களின் எண்ணங்கள் உங்களின் செயல்கள் எல்லாம் வெற்றியை அடைவதற்காக சிந்தித்து செயல் படும், மேலும் உங்களின் இரவு நேரங்களின் கெட்ட கனவுகளில் இருந்தும் வெளிவரலாம்.முதலில் எடுத்தவுடன் ஒரு ஐந்து மினிடங்களின் இருந்து ஆரம்பிக்கலாம், மேலும் அந்த ஐந்து நிமிடம் எப்பொழுது முடியும் என எதிர்பார்த்து உங்களின் கண்களை திறக்காமல் அலாரம் ஒன்றை வைத்து கொள்ளுங்கள்.
இன்றைய நாளில் இருந்து தியானத்தை ஆரம்பிப்போம், வாழ்க்கையில் சாதிப்போம்,
உங்களின் சாதனையை பார்க்க வசந்தமிழின் வாழ்த்துக்கள்.