Translate

Followers

THE PARABLE OF PIPELINE BOOK IN TAMIL

 

தினமும் வேலை சென்று உழைத்து பெரும் பணத்தை விட, நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் பொழுது வரும் பணத்திற்கு தான் மதிப்பு அதிகம், நீங்களும் இதை போல் சம்பாதிக்க "PASSIVE INCOME" என்றால் என்ன என்பதை "THE PARABLE OF PIPELINE " என்ற புத்தகத்தில் இருந்து வாங்க படிக்கலாம்,



ஒரு அழகிய கிராமத்தில் ரமேஷ், சுரேஷ் என இருவர் இருந்தனர், இவர்களுக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது அவர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க ஒரு தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர், அதற்கு ஏற்றவாறு அவர்கள் இருக்கும் ஊரில் தன்னிர்ப்பஞ்சம் வந்தது, அந்த ஊரின் ஜமீன்தார் இருவரும் ஒருநாளைக்கு பக்கத்து கிராமத்து ஆற்றில் இருந்து எத்தனை வாலி தண்ணீர் தருகிறீர்களோ, அதுற்கு ஏற்றவாறு பணம் என்று அறிவித்தார், 


ரமேஷ் மிகுந்த பலசாலி அதனால் அவன் தினமும் நூறு தடவை பெரிய வாலியில் தண்ணீரை எடுத்து வந்துகொண்டு இருந்தான், ஆனால் சுரேஷ் மிகுந்த திறமைசாலி அதனால் காலையில் ஒரு இருப்பதிலிருந்து முப்பது வாலிகிளில் தண்ணீரை எடுத்து வந்து கொண்டு இருந்தான், மேலும் அவன் இரவில் அந்த ஆற்றில் இருந்து தன்னுடைய ஊரிற்கு ஒரு பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டுவருமாறு வேலைசெய்தேன் அவன் செய்கின்ற வேலையை பார்த்து அனைவரும் சிரித்தனர், ரமேஷ் உம் ஒரு நாளைக்கு நிறைய வேலை செய்து அந்த ஊரில் ஒரு சொந்த வீடு வாங்கி விட்டான், ஆனால் சுரேஷ் அந்த பைப் லைன் வேலையை மூன்று ஆண்டுகாலமாக செய்து வந்தான், 


இப்பொழுது அவனின் வேலையும் முடிந்தது, அவன் பைப் லைன் ஐ அமைத்து விட்டு தினமும் அவன் வேலை செய்யாமல் பணம் சம்பாதித்தான், அவன் உறங்கும் பொழுதும் அவனிற்கு பணம் வந்துகொண்டிருந்தது, ஆனால் ரமேஷ் மூன்று ஆண்டுகால கடினமாக உழைத்து கை கால்கள் தேய்ந்த வலியோடு அவனது வேலையும் பறிபோகி மீண்டும் ஏழ்மையில் தள்ளப்பட்டான்.


இக்கதையின் மூலம் நாம் தினமும் பணிபுரியும் 9am -5am வேலை, உங்களது ஒரு வருமானம் மட்டுமே தரும், ஆனால் நீங்கள் நினைக்கும் உங்களது கனவு வாழ்க்கையை வாழ வேண்டுமானால் 7pm-11pm மணியளவில் சுரேஷ் செய்ததை போன்று உங்கள் வாழ்க்கைக்கு உங்களின் திறமைக்கு ஏற்ப பைப் லைன் ஐ அமையுங்கள்.


நன்றாக அமைக்க இந்த "வசந்தமிழின்" வாழ்த்துக்கள், 


மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்: