Translate

Followers

"இருள் வருகையில் ஒளித்திடு" MOTIVATIONAL MONDAY"

 

யாரோ ஒருவன், தினமும் எழுந்து அவனது வேலையை சரியாக செய்து வருகிறான், மேலும் அவன் ஒரு இடத்தில் பனி புரிகிறான், அவன் ஒரு கடின உழைப்பாளி மற்றும் அடுத்தவர்களின் வேலையை சேர்த்து செய்வதுடன், அவன் அங்கிருந்து தினமும் கிளம்புவதற்கு முன்பு அங்கிருக்கும் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு வீடு திரும்புபவன், ஒரு நாள் அவன் பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு ஆலோசனை நடந்தது, ஆனால் அங்கு இவனை தேர்வு செய்யாமல் வேறொருவனை தேர்ந்தெடுத்தார்கள், அதற்கு இவன் மிகவும் வருத்தப்பட்டான், திடீரென ஒரு அசிரீரி, அடேய் முட்டாள் நீ கடின உழைப்பாளி தான் ஆனால் நீ உன்னுடைய வேலையை யாருக்கும் தெரியாத அளவுக்கு செய்கின்றாய், அவன் ஒரு வேலை செய்தலும் தெரிந்த மாதிரி செய்கிறான், அதனால் நீ உன்னுடைய கடின வேலையில் சிறிது புத்தியையும் பயன் படுத்தி செய்தால், ஒரு நாள் உன்னை உலகமே திரும்பி பார்க்கும், 



அதே போல் நீங்களும் உங்களது தினசரி வேலையில் நான் மாடு போல் கடுமையாக உழைத்தும் பயன் இல்லை என வறுத்த படாதீர்கள், உங்களின் வேலையை இந்த உலகத்திற்கு தெரிய படுத்தும் படி ஒரு நாள் அமையும் அதற்காக காத்திருந்து நேரம் வரும் சமையத்தில் அதனை செய்யுங்கள், என் என்றால், இருள் வந்த பிறகு தான் எரியும் விளக்கின் மதிப்பு தெரியும், 


உங்கள் வாழ்க்கையின் இருள் வர நேரத்தில் நான் வருகிறேன் "அசிரீரியாக" 

அப்பொழுது ஒளித்துடுங்கள்!


இந்த வாரம் இனிய வரமாக "வசந்தமிழின்" வாழ்த்துக்கள்