Translate

Followers

"EGO IS THE ENEMY BOOK IN TAMIL"

     

    பொதுவாக இந்த உலகத்தில் யாரை நீங்கள் எடுத்துக்கொண்டாலும், அவர்கள் இந்த மூன்று விஷயத்துக்குள் தான் இருப்பாங்க அவை, வெற்றியைத்தேடுபவர், வெற்றியாளன், தோல்வியாளன், இவுங்க மூணு பெருக்குள்ளையும் இருக்கின்ற ஒற்றுமையான ஒரு விஷயம் எதுவென்றால்  "ஈகோ", இந்த ஈகோ வை எப்படி சமாளித்து உங்களது வெற்றியை தக்கவைக்கலாம் என வாங்க இன்றைய "EGO IS THE ENEMY" புத்தகத்தை படிக்கலாம் 


1. வெற்றியைத்தேடுபவர்:

வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு உயரத்தை அடைய எதையாவது தேடுபவர்கள் தான் இதற்குள் வருவார்கள், ஆனால் இவருக்குள் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் நாம் இவ்வாறு திட்டம் தீட்டினால் இதனை அடையாளம், அதன் பின் எல்லாரும் நம்மை பாராட்டுவார்கள் என கனவு உலகத்தில் வாழ்பவர், இந்த கனவுகள் இந்த போலி பாராட்டுகளே "ஈகோ" , எனவே நீங்கள் செய்ய நினைப்பதை எவரிடமும் சொல்லி  அந்த வெற்றியை காண்பதற்கு பதிலாக, அந்த செயலை செய்து விட்டு உங்கள் செயலின் மூலம் கிடைத்த வெற்றியை வைத்து அனைவரும் வந்து பாராட்டும் படியாக நடந்துகொள்ளுங்கள்.


2. வெற்றியாளன்:

இப்பொழுது உங்களின் செயலுக்கு வெற்றி கிடைத்து விட்டது, இவைகளை தக்கவைத்து கொள்ள நீங்கள் எல்லாரிடமும் நான் வெற்றி பெற்றுவிட்டேன், என்னை பாருங்கள் அப்படி இப்படி என்று தற்பெருமைக்கு அடிமையாகி விடுவீர்கள் இதுவே உங்களுக்குள் இருக்கும் "ஈகோ" இதனை அழிக்க வெற்றி வந்த பின் அந்த வெற்றிக்கு ஒரு நன்றியை தெரிவித்துக்கொண்டு உங்களின் வேலைக்கு திரும்பி விடுங்கள், வெற்றியை கொண்டாடுபவரை விட வெற்றியை பார்த்ததும் அதை தக்கவைத்துக்கொள்ள அதற்காக வேலை செய்பவனே உண்மையான வெற்றியாளன்.


எடுத்துக்காட்டாக: நமது முன்னாள் இந்தியா கிரிக்கெட் கேப்டன் டோனி யை சொல்லலாம், ஏனென்றால் அவர் எவ்வளவு பெரிய வெற்றி அடைந்தாலும் அந்த வெற்றியை தலையில் வைத்து ஆடாமல் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு, அவரின் அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார், அதுவே அவரின் வெற்றியாகும் 


3. தோல்வியாளன்:

மனித வாழ்க்கையின் முக்கியமான ஒரு பகுதி தோல்வி, இவர்கள் தோற்று விட்டால், அந்த தோல்விக்கு யாரை காரணம் சொல்லலாம் யார்மேல் பழியை போடலாம் என்று ஆராய்வார்கள் இந்த ஆராய்தலே "ஈகோ" ஆகும், இவ்வாறு ஆராயாமல் இந்த தோல்விக்கு நானே பொறுப்பு என்று அதனை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு தோல்வி ஒரு வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும்


இவ்வாறு மேல் உள்ளதை படித்து உங்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் அடைந்தாலும் அதனை தலையில் ஏற்றிக்கொள்ளாமல், அடக்கமாக எல்லாருக்கும் அன்பாக உங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் உங்களின் வேலையை பார்த்துகொண்டுஇருந்தால் வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம், உங்களின் வெற்றிப்பாதையை காண இந்த "வசந்தமிழ்" என்றும் நன்றியுடன் காத்துக்கொண்டிருக்கிறது.


மேலும் இந்த புத்தகத்தினை முழுவதுமாக படிக்கச்: