Translate

Followers

"SWITCH BOOK IN TAMIL"

 

    நம் வாழ்க்கையில் இதை செய்யவேண்டும், நான் இந்த இடத்தில் இருக்க வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், என்னுடைய உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், நன்றாக வேலை செய்து முன்னேற வேண்டும் என பல திட்டங்கள் ஓடிக்கொண்டு இருக்கும், ஆனால் அது இறுதிவரையில் திட்டமாகவே இருந்துவிடும், அதை செயல் படுத்த மாட்டோம், அதை செயல் படுத்தினாலும் ஒரு இரண்டு வாரங்கள் கூட அதை பின்பற்ற மாட்டோம், இதில் இருந்து சுவிட்ச் (SWITCH) செய்து நாம் என்ன நினைத்தாலும் அதை முழுவதுமாக செய்ய இன்றைய SWITCH புத்தகத்தை படிக்கலாம் வாங்க, 

உன்னுடைய வாழ்க்கையை "யானை சவாரி" செய்வது போல் கற்பனையாக நினைத்துக்கொள், யானை பாகன் தான் உன்னுடைய மூளை, யானை தான் உன் உண்ர்ச்சி (Emotional) கொண்ட இதயம் என வைத்து கொள், அந்த யானையை ஓட்டுவதே உன்னுடைய வேலை, அதை சரியாக ஓட்டினால், நீ எங்கு சென்றடையவேண்டுமோ அந்த பாதையில் சரியாக செல்வாய், 


1. யானை பாகனை சரியாக வழிநடத்த வேண்டும் 

ஒன்று நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு சாதனமான மனிதர், ஆனால் யானையோ மிகுந்த வீரம் மற்றும் பலம் கொண்ட ஒரு விலங்கு, அதற்கு கோவம் வந்தால் உங்களை தள்ளி விட்டு அதன் போக்கில் சென்று விடும், அதனால் அதை நீங்கள் சரியாக வழிநடத்த வேண்டும், எப்படி வழி நடத்தலாம்? நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெளிவாக ஒரு வரைபடம் போட்டு கொண்டு அவ்வாறு செல்லுங்கள், பத்து வேலையை நான் செய்வேன் என்று அதிகமாக சுமை குடுத்தாள் ஒன்று கூட செய்யமுடியாது, அதற்குமாறாக ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என தெளிவாக எழுதுங்கள், எப்படி ஒரு கதைக்கு திரைக்கதை முக்கியமோ அவ்வாறு நீங்கள் போகின்ற பாதையை இவ்வாறு அமைக்கலாம் என எழுதுங்கள். 


2. யானையை ஊக்குவிக்க வேண்டும் (MOTIVATION)

நம் மனம் போன போக்கில் என்றுமே செல்ல கூடாது, உங்களின் கட்டளைக்கு ஏற்பவே அது செல்ல வேண்டும், ஆனால் அந்த கட்டளை கடினமாக இருந்தால் நீங்கள் சொல்வதை உதறி தள்ளி விட்டு யானை அதன் போக்கில் சென்று விடும், அதனால் அதனை ஊக்குவிக்க வேண்டும் 


உதாரணத்திற்கு-  உங்களின் உடல் எடையை குறைக்க நினைத்தால், தின்பண்டங்களை நிறுத்த வேண்டும், உங்கள் கையில் ஒரு ஆப்பிள் இருந்தாலும், உங்கள் கண்ணில் ஒரு நொறுக்கு தீனியை கண்டு விட்டால், உங்கள் மனம் அதன் பக்கமே செல்லும், ஆதலால் நொறுக்கு தீனியை கண்டு இது உன்னை சோம்பேறியாக்கும் இதை பருகினால் உன்னை பார்த்து உலகம் சிரிக்கும், ஆனால் ஆப்பிள் ஐ சாப்பிட்டால் உன் உடல் சீராக மாறும், உன்னை போற்ற அனைவரும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என உங்களின் யானை இடம் பேசுங்கள்.


3. யானை செல்லும் பாதையை உருவாக்குங்கள்

எப்பொழுதும் உங்களை சுற்றி இருக்கும் இடத்தை தெளிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் உங்களின் இடமே ஒரு மாற்றம் தரும், அதுவே உங்களின் வெற்றி பாதையை உருவாகும் 


உதாரணத்திற்கு- நீங்கள் நன்றாக அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினால், உங்களின் அறையில் புத்தகங்களை நிரப்பி வையுங்கள்,  புத்தகவிரும்பி நண்பர்களிடம் அதிகம் பேசுங்கள், உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள் இதன் மூலியமாக நீங்கள் புத்தங்களும் படித்த மாதிரி இருக்கும், மேலும் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கான அறிவினை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.


இவ்வாறு மேல் உள்ளதை செய்துகொண்டு, உங்களின் வாழ்க்கையை நன்றாக வாழ "வசந்தமிழின்" வாழ்த்துக்கள் 


மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்: