TALENT IS OVERRATED BOOK IN TAMIL
பொதுவாகவே சாதித்தவர்களை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, நம்ப என்ன சொல்லுவோம் என்றால், எப்பா இவனுக்கு நல்ல திறமை இருக்கு, இவன் அதிர்ஷ்டசாலி இப்படிலாம் சொல்லுவோம், ஆனால் அவர்கள் அந்த இடத்தை அடைய எவ்வளவு கடுமையாக உழைத்தார்கள் என்று யாரும் பேசமாட்டார்கள் ஏன் சொல்ல போனால் யோசிக்க கூட மாட்டார்கள், அதை பற்றி யோசித்து நீங்களும் உங்களின் கடுமையான உழைப்பினால் முன்னேற சில வழிகள் இன்றைய புத்தகத்தில் (TALENT IS OVERRATED) இருந்து படிக்கலாம் வாங்க:-
1. ஆரம்ப காலத்தில் இருந்து ஆரம்பிக்கவும்.
நம் வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டும், நாம் இப்படி தான் ஆக வேண்டும் என்றால், அதற்காக சிறு வயதில் இருந்தே அதனை பயிற்சி செய்ய வேண்டும், அதை தினமும் குறைந்தது நான்கு மணி நேரமாவது பயிற்சி செய்ய வேண்டும், இப்படி பத்து வருடங்களுக்கு தொடர்ந்து பயிற்சி செய்தால் நீங்கள் கண்டிப்பாக அந்த துறையில் பிரதிபலிக்கலாம்.
2. கற்றல் மிகவும் நல்லது
இப்பொழுது ஒரு கேள்வி வரலாம், நான் பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன் அதுவும் தினமும் பத்து மணி நேரம் மேல் வேலை செய்கிறேன், நான் ஏன் முன்னேற வில்லை?
இந்த கேள்வியின் பதில் அதற்க்குள்ளையே உள்ளது, நீங்கள் இவ்வளவு ஆண்டுகளாக செய்த வேலையையே திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்குறீர்கள், சொல்ல போனால் அதன் போக்கில் நீங்களும் போகிறீர்கள், அப்படி போகாமல் நீங்கள் செய்யும் வேலையை எப்படி முன்னேற்றலாம், (Improvement) என்று யோசித்தால் கண்டிப்பாக முன்னேறலாம், அதற்கு தினமும் கற்றல் அவசியம்,
3. நான்கு நாள் சூறாவளி பலன்
பொதுவாக நம்மில் பலர் ஒரு முயற்சி காணொளியை பார்த்துவிட்டு ஒரு நான்கு நாளைக்கு சூறாவளி போல சுழன்று ஐந்தாவது நாள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிவிடுவோம், இப்படி செய்யாமல் ஆமை போல் பொறுமையாக முன்னேற முயற்சி செய்யுங்கள்.
4. வழிகாட்டியின் அவசியம் (Mentor)
புதிதாக செய்யலாம் என அதை செய்து நேரத்தை வீணாக்காமல், அதை செய்தவரிடம், சில அனுபவங்களை பயின்று / கற்று இதனை எவ்வாறு செய்யலாம் என சிந்தித்து செய்யுங்கள், அதை செய்தபின் அவர்களிடம் கருத்துக்களை கேளுங்கள் நான் செய்தது சரியா? அல்லது தவறா? என்று.
5. வரைபடம் (Graph)
நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு வரைபடம் போடுங்கள், நீங்கள் எவ்வாறு இருக்குறீர்கள் என்று அறிந்து கொள்ள அது உதவும்.
மேல்கூறியவற்றை படித்து வாழ்க்கையில் சாதிக்க அதற்கான கடின பயிற்சியை எடுக்க "வசந்தமிழின்" வாழ்த்துக்கள்
இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச்:
