Translate

Followers

MILLION DOLLAR HABITS BOOK IN TAMIL

 பொதுவாகவே பெரியவங்க சொல்லுற ஒரு விஷயம், நல்ல பழக்க  வழக்கங்களை கத்துக்கோ, அது தான் உன்னுடைய வெற்றிக்கு வழியமைக்கும் என்று, அப்படி ஒரு ஐந்து பழக்கவழக்கங்களை கத்துக்கிட்டு வாழ்க்கையில் சாதிக்க வாங்க இன்றைய புத்தகத்தை பார்க்கலாம், (MILLION DOLLAR HABITS)



1. சுய கருத்துக்கள்/ எண்ணங்கள் 

நம்மில் பலர் நினைக்கும் காரியம் எவ்வாறு இருக்கும் என்றால், ஐயோ இன்னிக்கு நாள் எப்படி இருக்க போகுதுனு தெரியலை, நம்ப செய்யுற விஷயம் தோல்வியில் முடிந்திடுச்சுனா நம்ப வாழ்க்கையே அவ்வளவு தான், இவ்வாறு நமக்கு நாமே நினைக்கும் தவறான எண்ணங்களை நிறுத்திவிட்டு நல்ல எண்ணங்களை உருவாக்குவோம், ஏன் என்றால் ஒருவனின் எண்ணங்களே அவனது வாழ்க்கையை தீர்மானிக்கிறது, (எண்ணம் போல் வாழ்க்கை). 


2. ஒழுக்கம்

நம்மில் பலர் ஒழுக்கத்தை கையாள தவறிக்கொண்டு இருக்கிறோம், காரணம் நல்லவர்கள் போல் அதுவும் மிகுந்த ஒழுக்கம் உள்ளவர் போல் இருந்தால் நாம் வெளியில் தெரிய மாட்டோம், மேலும் நம்பலை எல்லோரும் கேலி செய்வார்கள் என்று ஒழுக்கத்தை கையாள மறக்கிறோம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் ஒருவரின் ஒழுக்கமே ஒருவரை மேல்நோக்கி கொண்டு செல்லும். 


எடுத்துக்காட்டு- ஜாக்கி சான், பில் கேட்ஸ், அர்னால்டு இவர்கள் ஒழுக்கத்தினால் மட்டுமே சாதனையை காட்டிலும் இன்றும் நம் மனதில்  இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு- காலையில் ஆறு மணியளவில் எழுதல், இதனை பின்பற்றுவது மிகவும் கடின மான ஒன்றாகும், ஆனால் பின்பற்றினால் உங்களின் வாழ்வில் தினமும் ஒரு நல்ல நாள்-ஐ உருவகிக்கிறோம் என்ற புத்துணர்ச்சி வர வழிவகுக்கும், மேலும் உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மணி நேரம் அதிகமாக கிடைக்கும் 


3. நல்லதை நினைப்போம்

தினமும் மூளைக்கு நல்ல தீனியை போடவும், அப்பொழுது தான், நாம் நன்றாக சிந்திப்போம், கண்ட சிந்தனைகளை பற்றியும் கண்ட வேலைகளில் நேரத்தை வீண் அடிக்க மாட்டோம், 


உதாரணத்திற்கு- உலகின் தலை சிறந்த கார் ஆன "ரோல்ஸ்-ராய்ஸ்" நிறுவனம் எந்த ஒரு ஊடகங்களிலும் விளம்பர செய்தி வெளியிடாமல் இருப்பது, ஏன் என்றால் அதனை வாங்கும் நபர் விளம்பரங்களை பார்த்துக்கொண்டு அவரின் நேரத்தை வீணடிக்க மாட்டார் என்பதே அர்த்தம். 


4. நேரம் மேலாண்மை

எந்த ஒரு வேலைகளும் நாம் செய்து கொண்டு இருந்தால் அன்றைக்கு முழுவதும் செய்து கொண்டே தான் இருப்போம், அதற்கு மாறாக இதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பேன் என உங்களுக்கு நீங்களே ஒரு குறிக்கோள் வைத்து கொண்டால் அதனை சுலபமாக செய்தும் முடிக்கலாம், உங்களின் நேரத்தையும் காப்பாற்றலாம்.


5. உடல் நிலையில் கவனம்

நீங்கள் என்றைக்காவது காலை ஐந்து அல்லது ஆறு மணி அளவில் வெளியில் சென்று பார்த்தல் பெரியவர்கள் நடை பயிற்சி செய்து கொண்டு இருப்பார்கள், அவர்கள் யார் என்று யோசித்து பார்த்தல், எல்லோரும் பணக்காரர்களாக இருப்பார்கள், ஏன்எனில் நம்மில் பலரும் பணத்தை சம்பாதிக்க ஓடுகிறோம் பின்பு வயதானதும் நம் உடலிற்காக அதனை செலவிடுகிறோம், எப்பொழுதும் ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள் மனிதனுக்கு முதலில் அவனது உடல்நிலைதான் முக்கியம், ஆதலால் அதனை சீராக பார்த்துக்கொள்ளுங்கள்.


மேல் கூறியவற்றை பின்படுத்தி உங்களின் வாழ்க்கையை வெற்றிவாழ்க்கையாக அமைக்க "வசந்தமிழின்" வாழ்த்துக்கள் 


மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: