THINK STAIGHT BOOK IN TAMIL
பொதுவாகவே நமக்கு எதனா வாழ்க்கையில் பிரச்னை வந்துடுச்சுனா, உடனே ஐயோ நமக்குமட்டும் ஏன் இப்படி நடக்குது, நம்ப வாழறது எதற்காக, நமக்கு சரியான வாழ்க்கையே அமையவில்லை, இப்படினு புலம்புவோம், இப்படி புலம்புரத்தை விட்டுட்டு, அதை எப்படி சரிசெய்யலாம் என்று யாரும் யோசிக்கிறதில்லை, அதை எப்படி யோசித்து பண்ணலாம்னு ஒரு சில வழிகள் தான் இன்றைக்கு படிக்கச் போகிறோம் வாங்க இன்றைய புத்தகத்தை (THINK STRAIGHT) படிக்கலாம்.
1. தெளிவான முடிவு
முதலில் நம்ப பிரச்சனை என்னவென்று தெளிவாக யோசித்து வைத்திடுங்கள், இது தான் நமக்கு பிரச்சன்னை, இதை எவ்வவாறு சரி செய்யலாம் என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தாலே அதில் இருந்து எப்படி மீளலாம் என்று ஒரு தெளிவான எண்ணம் உண்டாகும்.
2. வாழ்க்கை ஒரு நேரான பாதை அல்ல
நாம் இன்றைக்கு இதை செய்யலாம், அடுத்த ஒரு வாரம் நாம் இவ்வாறு செய்யலாம், இத்தனை ஆண்டுகள் உழைத்தால் நாம் பணக்காரர் ஆகிவிடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டு கொள்ளலாம், ஆனால் அத்தகைய திட்டமெல்லாம் நிறைவேறுவதற்கு எந்தவித உறுதி மொழியுமில்லை, எதாவது பிரச்சன்னை அல்லது சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக ஏற்படலாம் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு- நாம் 2020 அன்று பல திட்டங்கள் தீட்டி இருக்கலாம், ஆனால் அதையெல்லாம் கொரோனா என்ற நோய் எதிர்பாராமல் வந்து அதனை அழித்துவிட்டது, இதணை நினைத்து புலம்பாமல், இதணை எவ்வாறு சமாளிக்கலாம் என்று யோசித்து முடிவெடுங்கள்.
3. திட்டத்தை வடிகட்டுங்கள்
இன்றைய காலகட்டங்களில் நாம் எதையாவது தேடினால், அதற்கு மாறாக நம்மளை மகிழ்விக்கும்படி பல திட்டம் வரும், அதை அனைத்தும் எண்ணி குழம்பாமல் அத்தகைய விஷயங்களை வடிகட்டுங்கள், வடிகட்டி ஒரு வழியை தேர்ந்தெடுங்கள்.
உதாரணத்திற்கு- வண்டி வாங்கலாம் என்று முடிவெடுத்து நாம் யோசித்தால் கண்முன்னே ஆயிரம் வண்டிகள் நல்லதாக தெரியும், ஆனால் உங்களுக்கு எது தேவையோ அத்தகைய வண்டியை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள்
4. வழக்கத்திற்கு மாறாக செயல் படுங்கள் :
எப்பொழுதும் வெள்ளை, கருப்பு நிறங்கள் இடையில் நடுவில் ஒரு நிறம் உண்டு அந்த நிறத்தில் நின்று யோசித்து செயல் படுங்கள், அந்த திட்டம் சரியாகவும் மற்றும் உங்களின் வாழ்க்கையில் அந்த செயல் இணையுமாறும் செய்யதல் வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களை வைத்து உங்களின் பிரச்னையை, ஆராய்ந்து அதை வடிகட்டி, அதனை வழக்கத்திற்கு மாறாக ஒரு நேரான முடிவை எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற வசந்தமிழின் வாழ்த்துக்கள்
மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்:
