Translate

Followers

WINGS OF FIRE BOOK IN TAMIL (அக்னி சிறகுகள்)

 

    பொதுவாக எல்லாரும் கேற்கின்ற ஒரு கேள்வி, வாழ்க்கைக்கு ஒரு சில தத்துவம் இருந்தால், அதை பின் பற்றி வாழலாம், அப்படி இல்லையென்றால் இவரை வழிகாட்டியாக வைத்து நாம் முன்னேறலாம், இந்த இரண்டு சொல்லிற்கும் தகுதியான ஒரே மனிதர் நம் ஐயா :அப்துல் காலம்"  அவர்கள் தான், அவரின் வாழ்க்கையில் இருந்து கூறப்பட "ஐந்து வாழ்க்கை நெறிகளை" தான் இன்றைக்கு "அக்னி சிறகுகள்" (WINGS OF FIRE) என்ற புத்தகத்தில் இருந்து படிக்கப் போகிறோம் வாங்க படிக்கலாம்.

1. நலம் விரும்பிய நபர்கள்

வாழ்க்கையில் நாம் சோர்த்து போனால் நம்பலை கைதூக்கி விடுவதற்கு ஒரு நல்ல நண்பரோ அல்லது நல்ல நபரோ தேவை, இன்றைய காலகட்டங்களில் நாம் எந்த ஒரு விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அதை ஒரு இரண்டு நாள் மேல் செய்து விட்டு அதில் இருந்து விலகிவிடுகிறோம், ஆனால் அதை முழுவதுமாக செய்ய நம்பலை ஊக்கு விக்க ஒரு நல்ல நபர்கள் வாழ்க்கைக்கு தேவை, அப்படி உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால் நல்ல புத்தகத்தை தேடி அதை பின்பற்றி படியுங்கள். 


2. கனவு காணுங்கள் 

நாம் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் ஒரு தொலைநோக்கு பார்வையாக இருத்தல் வேண்டும், நம் சிந்தனைகளும், நம் செயல்களும் எப்பொழுதும் அதை பற்றியே நினைத்து கொண்டு இருத்தல் வேண்டும், அப்பொழுது தான் நாம் நினைத்த காரியம் கைகூடும்.


3. சந்தர்பத்தின் மேல் பழிகூறாமல் இருத்தல் வேண்டும்.

நான் மிகவும் ஏழை, நான் சம்பாதிக்கும் பணம் எனக்கு பத்தவில்லை, எனக்கு நேரம் இல்லை என்று சாக்கு சொல்கின்றவன் எப்பொழுதும் வெற்றி பெற மாட்டான், நம் கனவுகள் நினைவாக வேண்டும் என்றால், நாம் கிடைக்கின்ற நேரத்தில் அதற்கான வேலையை மனநிறைவுடனும், கவனத்துடனும் செயல் பட்டு இருந்தாலே என்றைக்காவது ஒருநாள் அத்தகைய விஷயம் கைகூடும்.


4. பிடித்த வேலையை செய்தல்

எப்பொழுதும் ஒன்றை நீங்கள் உணர்த்திருக்குறீர்களா? உதாரணத்திற்கு எனக்கு எழுதுவது என்றாலே புடிக்கும், நான் எவ்வளவு எழுதுவது இருந்தாலும் எழுதி கொன்டே இருப்பேன், இதை போன்று உங்களுக்கும் எதாவது பிடித்த செயல் ஒன்று இருக்கும், அதை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் உங்களின் தனித்துவத்தை தெரிந்துகொண்டு சாதிக்க முடியும், எப்பொழுதும் பாதுகாப்பான மண்டலத்தில் இருந்தால் உங்கள் வாழ்க்கை இருந்தோம் போனோம் என்று ஆகி விடும், அதை விட்டு வெளியில் வந்து சாதிக்க வேண்டும் என்றால் உங்களின் பிடித்த வேலையை செய்ய வேண்டும். 


5. நன்றி கூறுதல்

நாம் எதை செய்தாலும், ஒரு நன்றியை கூறிக்கொண்டே இருக்க வேண்டும், அப்பொழுதுதான் "நான்" என்ற அகங்காரம் உங்களின் வாழ்க்கையில் வராது இருக்கும், ஒரு விஷயத்தை செய்வதற்கு பலரின் அபிப்ராயத்தை கேளுங்கள் அது உங்களின் வாழ்க்கைக்கு சரியாக அமைந்தால், அதை சொன்னவரிடம் இது நடந்து விட்டது, என கூறி அவர்களுக்கு நன்றி கூறுங்கள்.


இந்த ஐந்து விஷயத்தையும் கடை பிடித்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்று சாதித்து காட்டியவர் "காலம் ஐயா" அவர்கள், நீங்களும் அவரை போன்று சாதிக்க "வசந்தமிழன்" மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.


மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்: