"AWAKEN THE GIANT WITHIN BOOK IN TAMIL"
பொதுவாக பணக்காரர்கள் கதையை கேட்டிங்கனா, அவுங்க சொல்றது ஒன்னு மட்டும் தான், நான் இப்படிலாம் வாழுவேன் என்று நெனச்சி கூட பார்க்கவில்லை, என் அப்பா ஒரு ஏழை, ஆனால் என்னுடைய கடின உழைப்பில் மட்டுமே, நான் முன்னேறினேன், இதை கேட்க வேடிக்கையாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தான் உண்மை, அவர்கள் கடின உழைப்பைமட்டும் போடவில்லை, சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுத்ததால் மட்டுமே அவர்கள் இன்று அவர்களின் கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், நீங்களும் உங்களின் கனவு வாழ்க்கையை வாழ வாங்க இன்றைய புத்தகத்தை படிக்கலாம்,
சரி அந்த பூதம் இப்ப நமக்குள்ள என்ன செய்கிறது என்று நீங்கள் கேட்டால் எல்லார்க்குள்ளையும் "தூங்கி கொண்டுஇருக்கிறது" வேடிக்கையாக இருந்தாலும் இதுவே உண்மை, இந்த பூதத்தை தட்டி எழுப்பி உங்களின் கனவு வாழ்க்கையை வாழ நீங்கள் மூன்று விஷயத்தை செய்ய வேண்டும்
1. சரியான முடிவு எடுத்தல்
இன்றைய காலகட்டங்களில் நமது தினசரி வாழ்க்கை எப்படி போகிக்கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு பலரிடம் பதில் இல்லை, அதன் போகின்ற போக்கில் போகி கொண்டு இருந்தால் நாம் வாழ்வதில் அர்த்தமும் இல்லை, எனவே அதை மாற்றி அமைக்க சிறு சிறு முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த முடிவு உங்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும், அதை உங்களின் தினசரி பழக்கம் ஆகும் வரை அதை செய்து கொண்டு இருக்க வேண்டும்,
உதாரணத்திற்கு- தினமும் தாமதாக எழுவதற்கு, காலை எழுந்து ஒரு மணிநேரம் நடை பயிற்சி செய்யலாம், கைபேசி பயன் படுத்துவதற்கு மாறாக தினமும் ஒரு பத்து நிமிடங்கள் புத்தகத்தை படிக்கலாம், இந்த இரண்டு முடிவுகள் சிறிய முடிவாக இருந்தாலும், சரியான முடிவாகும்.
2. வலி, மற்றும் அந்த வலியின் இன்பம்
நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் வலிகள் இருக்கும், அந்த வலிகளை தாங்கும் சக்தி உங்களுக்குள் கொண்டு வர வேண்டும், அந்த சிறு சிறு வலிகளை தாங்கி கொண்டு இருந்தால் கண்டிப்பாக அந்த வலிகள் உங்கள் வாழ்க்கையின் இன்ப வழிகளாக மாறும்
உதாரணத்திற்கு: நான் மேல் கூறிய நடைப்பயிற்சி வலி, தினமும் கடினமாக இருந்தாலும் அந்த வலி உங்களின் உடலை சீராக, எந்த ஒரு நோயையும் அண்டாமல் உங்களின் உடலை மிகவும் வலுவாக வைத்திற்கும், இந்த இன்பத்தை பெறுவதற்கு வலிகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்
3. நம்பக தன்மை
நாம் எதை செய்தாலும் கேலி செய்யும் கூட்டம் இருந்து கொன்டே இருக்கும் அதை பொருட்படுத்தாமல், நாம் செய்வது சரியா என்ற கேள்விக்கு உங்களிடம் சரி என்ற விடை இருந்தால் நீங்கள் அதனை மற்றும் உங்களை நம்பி செய்து கொண்டே இருக்கலாம்.
இந்த மூன்று விஷயத்தையும் வாழ்க்கையில் செலுத்தினால், உங்களின் கனவு வாழ்க்கையை அடையாளம், இதனை படித்து உங்களின் முடிவுகளை சரியாக எடுக்க "வசந்தமிழின்" வாழ்த்துக்கள்
மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்: 👇
